வழமைக்கு மாறாக கடும் குளிருடன் கூடிய காலநிலை நாடளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மற்றும் வாகரைப் பகுதிகளைச் சோ்ந்த ஐந்து போ் குளிரில் விறைத்து நேற்று வியாழக்கிழமை மரணமடைந்துள்ளனர்.
அதிக குளிரினால் உடல் வெப்பநிலை குறைவடைந்ததால் அவர்கள் இறந்திருப்பதாக வாகரை உதவி அரசாங்க அதிபர் ஆர். இராஜகுலநாயகி தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் மட்டக்களப்பு நகர வீதியில் பிச்சை எடுப்பவராவார்.
நேற்று முன்தினம் புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட வெப்பநிலை சுமார் 16 பாகையளவிற்கு குறைவடைந்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவந்த மழை ஓய்ந்த நிலையில் நிலவும் கடும் குளிர் காரணமாக ஐந்து போ் உயிரிழந்துள்ளனர். கடும் குளிர் காரணமாக முதியவர்களும் குழந்தைகளும் மிகவும் கஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
நேற்று வெயில் எறித்தபோதும் வயதானவர்களால்கூட தாக்குப் பிடிக்க முடியாதளவிற்கு குளிர் காணப்பட்டது. கடும் குளிர் காரணமாக நேற்று திருமலை வீதியில் சம்பத் வங்கிக்கு அருகாமையில் உள்ள மருந்தகம் முன்பாக காரைதீவைச் சோ்ந்த 53 வயதுடைய நல்லையா அமிர்தலிங்கம் உயிரிழந்துள்ளார். இவருடைய சடலத்தை மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.
அத்துடன் ஜெயந்திபுரத்தில் 40 வயதுடைய ரவி என்பவர் நீரில் வழ்ந்து குளிரினால் மரணமடைந்ததுடன் ஊறணியில் வயோதிபப் பெண்ணொருவர் குளிர் காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை வாகரை வம்மிவெட்டுவானிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 17 போ் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் 61 வருடங்களின் பின்னர் வெப்பநிலை இந்த வருடமே குறைவடைந்துள்ளது. கடுமையான மழையினாலும் நாட்டின் கிழக்கு, மத்திய பிராந்தியங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள குளிரினால் மக்கள் பல்வேறு உபாதைகளுக்குள் சிக்கியுள்ளனர்.

0 Responses to தென் தமிழீழம் வாகரையில் குளிரில் விறைத்து 5 போ் மரணம்