Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வணக்கம்.
நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும்,பெரியாரியத்தை தன் வாழ்நாள் முழுவதும் சிறப்பாக பின்பற்றியவருமானதமிழீழச்செல்வன் என்ற முருகேசன் தனது 28 வது வயதில் எதிர்பாராதவிதமாகமாரடைப்பால் 10.1.2011 காலை 10.00 மணிக்கு உயிர் நீத்தார்.

தமிழ்ச்சமூகப்போராளி தமிழீழச்செல்வன் வாழ்நாள் குறிப்புகள்தனது தொழிற்கல்வியை முடித்து விட்டு, தனது மாமாவுடன் சாதாரணமின்பழுதுபார்ப்பு பணியாளராக அனைவருக்கும் அறிமுகமானார். அப்போதுஅவருக்கு வயது 15. படிப்படியாக பெரியாரியலை கற்றார்.

திராவிடர் கழகத்தில்தன்னை இணைத்துக் கொண்டார். பின்பு, பெரியார் திராவிடர் கழகத்தின்களப்பணியாளராக மாறினார். 2004-ல் தாராபுரத்தில் நடைபெற்ற தமிழர் உரிமைமுழக்க மாநாட்டின் மிக முக்கிய பங்காளராக பணியாற்றினார். அதே நேரத்தில்தந்தை பெரியார் குருதிக்கொடைமன்றத்தின் செயலாளராக செயல்பட்டு 1000கணக்கான உயிர்களை காக்கும் அரும்பணியை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். தன்வாழ்நாளில் 20-முறை குருதி வழங்கினார். தனது உடலை கொடையாக தர வேண்டும்என்பது அவரது அவா. அதன் பொருட்டு, நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில்துவங்கப்பட்ட மே-2009 முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு உடல் கொடைஇயக்கத்தில் தன்னை பதிவு செய்து கொண்டார்.

செஞ்சோலை குழந்தைகள் படுகொலையின் துயரை மக்களோடு பகிர்ந்து கொள்ளும்விதத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரை அழைத்து சவப்பெட்டி ஊர்வலம்நடத்தினார். தனது சொந்த கிராமமான தளவாய்பட்டினத்தில் செஞ்சோலை குழந்தைகள்நினைவாக 61-மரங்களை நட்டார். அதைத்தொடர்ந்து, நிழற்படகாட்சியையும்-பொதுக்கூட்டத்தையும் நடத்தினார். தாராபுரத்தில்ஈழப்போர்-4-யின் போது தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களையும்,ஊர்வலங்களையும் ஒருங்கிணைத்தார்.

பெரியார் கழகம் 2007இல் துவங்கிய போது தன்னையும் அதில் இனைத்துக்கொண்டார்.தாராபுரத்தில் ஏழை எளிய மாணவர்கள் செலவின்றி மேற்கல்வி பயில வேண்டும்என்பதற்காக அரசு கலைக்கல்லுாரி துவக்கப்பட வேண்டும் என கையெழுத்துஇயக்கம் நடத்தினார். சேது சமுத்திரத்திட்டத்திற்கு எதிராக பா.. அரசுமுயற்சித்தபோது பேரா.பெரியார்தாசனை கொண்டு மிகச்சிறந்த பொதுக்கூட்டத்தைஒருங்கிணைத்தார். .வெ.கி.எஸ்.இளங்கோவன் தோற்கடிக்க வேண்டும் என்ற ஓரேசிந்தனையோடு 15-க்கும் மேற்பட்ட கிராமப்புற பிரச்சாரக்கூட்டங்களைஒருங்கிணைத்தார். தாராபுரத்தில் ஈழப்போர்-4-இல் தொடர்ச்சியாக பல்வேறுபோராட்டங்களையும், ஊர்வலங்களையும், கொடும்பாவி எரிப்புப்போராட்டங்களையும் ஒருங்கிணைத்தார். இதன் விளைவாக அவர் சி.பி.சி..டிவிசாரனையில் பொய் குற்றம் சாட்டி, அவரை கைது செய்ய காங்கிரசார் முயற்சிசெய்த போது, மிக இலாவகமாக அந்த சதிவலையை முறியடித்தார்.

முள்ளிவாய்க்கால் படுகொலை துயரை தாங்கமுடியாமல், செந்தமிழன் சீமான்அவர்களை காங்கயம் கல்லுரி மாணவர் சந்திப்பில் தன்னையும், தன்பெயரையும்அறிமுகப்படுத்தி போது சீமான் அவரை நெஞ்சார தழுவிவாடா தம்பிஎன்று தன்தம்பிமார்களில் ஒருவராக ஆக்கினார். நாம் தமிழரிலும் அவரது ஓயாத பணிதொடர்ந்தது, அமராவதி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் மலையாள அரசின்சதித்திட்டத்தை முறியடிக்க தோழர்களோடு களமிறங்கினார். அதன் விளைவாக,பிப்.9-2010-இல் செந்தமிழன்.சீமான் அவர்களின் தாராபுரம் பொதுக்கூட்டம்ஏற்பாடு செய்யப்பட்டது. நடிகர்.செயராம் பொய்வழக்கால் சீமான் அவர்கள்கூட்டத்திற்கு வரமுடியாமல் போனாலும், அக்கூட்டத்தை மிகச்சிறப்பாக நடத்திமுடித்தார். அதைத் தொடர்ந்து, மலையாள அரசின் சதித்திட்டத்தைமுறியடிக்கும் நுால் வெளியீட்டிற்கும் உறுதுணையாக இருந்தார்.தமிழீழச்செல்வன், அழகப்பன் அவர்களோடு 13-ஆண்டுகள் உடன் இருந்துகளப்பணியாற்றினார்.
குடும்ப வாழ்கைஅப்பா பெயர்-கம்பளத்தான் (கண் தெரியாதவர்)அம்மா பெயர்-.தெய்வானை (மனநோயால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு பிறகுஉயிர்நீத்தவர்)அக்கா பெயர்-.காளீஸ்வரி (திருமணமானவர்)தன் கடைசி ஆசையான உடல்கொடைக்கு பதிலாக, தன் விழிகளை கொடையாகக் கொடுத்து,தமிழீழத்தை பார்க்கும் ஆசையோடு தன் வாழ்நாளை நிறைவு செய்தார்.

0 Responses to நாம் தமிழர் கட்சியின் களப்பணியாளர் தமிழீழ செல்வன் மாரடைப்பால் மரணமடைந்தார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com