Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

16.01.2011 ஞாயிறு மாலை 7:30 மணிக்கு கனடா மொன்றியலில் இல 800 Marcel Laurin இல் அமைந்துள்ள மண்டபத்தில் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில் இந்திய வல்லாதிக்கத்தின் சதியால் வங்கக்கடலில் வீரகாவியமான தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 18 ஆம் ஆண்டு நினைவும் யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இராணுவத்தினரின் முற்றுகையில் வீரச்சாவைத் தழுவிய மூத்த உறுப்பினர் கப்டன் பண்டிதர் உட்பட அவருடன் வீரச்சாவடைந்த நான்கு மாவீரர்களின் 26 ஆம் ஆண்டு நினைவும் கேணல் சாள்ஸ் உட்பட அவருடன் வீரச்சாவடைந்த மாவீரர்களின் 3 ஆம் ஆண்டு நினைவும் சுமந்து தை மாதத்தில் வீரகாவியமான அனைத்து மாவீரர்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

மாவீரர்களின் நினைவுரைகளும் கவிதை மற்றும் சிறப்புரைகளும் இடம்பெற்றன. நிகழ்வில் மக்களவை, நாடுகடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.


0 Responses to மொன்றியலில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com