தலிபான்களின் முன்னால் தளபதியும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் 4 ஆவது முக்கிய ISIS தளபதியுமான ஹஃபீஸ் சயீட் என்பவன் 30 போராளிகளுடன் சேர்த்து ஆப்கானின் நன்கர்ஹார் மாகாணத்தில் கடந்த வாரம் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் கொல்லப் பட்டு விட்டதாக சனிக்கிழமை ஆப்கானின் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது.
NDS எனப்படும் ஆப்கானிஸ்தானின் புலனாய்வுத் துறை மேற்கொண்ட முயற்சியினால் ISIS போராளிகள் ஒன்று கூடும் இடம் அறியப் பட்டு அமெரிக்கக் கூட்டணி நாடுகளுக்கு அளிக்கப் பட்ட தகவலின் படியே குறித்த வான் தாக்குதல் நடத்தப் பட்டதாகவும் கூறப்படுகின்றது.
விமானத் தாக்குதல் மூலம் ISIS இன் முக்கிய தளபதியான ஹஃபீஸ் சயீட் கொல்லப் பட்டது ISIS உடனான ஆப்கானின் போரில் ஓர் முக்கிய வெற்றி எனவும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கொல்லப் பட்ட தளபதி ஏற்கனவே தலைக்கு $10 மில்லியன் பரிசு அறிவிக்கப் பட்ட அதே நபர் அல்ல என்றும் பரிசு அறிவிக்கப் பட்ட நபர் பாகிஸ்தானின் ஜமாட் உட் துவா போராளிக் குழுவின் தலைவனான ஹஃபீஸ் மொஹம்மெட் சயீட் என்றும் இவன் தற்போது லாஹூரில் பதுங்கி இருக்கலாம் என்றும் கூட விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.
2008 இல் இந்தியாவின் மும்பை நகரில் 164 மக்களைச் சுட்டுக் கொன்ற தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய லஷ்கர் ஏ டய்யிபா என்ற அமைப்பு குறித்த ஜமாட் உட் டவா கட்சியின் இராணுவக் கிளை என்பதும் முக்கியமானதாகும். இதேவேளை ஹஃபீஸ் சயீட்டுடன் சேர்த்து கடந்த வாரம் விமானத் தாக்குதல்களில் அதே பகுதியில் ஷஹிடுல்லா ஷஹிட் மற்றும் குல் சமான் உட்பட மேலும் 3 ISIS தளபதிகளும் கொல்லப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்க விமானத் தாக்குதலில் ISIS இன் 4 ஆவது முக்கிய தளபதி பலி!