Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இத்தாலி மேற்பிராந்தியத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் வாழும் நம் புலம் பெயர் தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து REGGIO EMILIA நகரில் அமைந்துள்ள மண்டபத்தில் மதியம் 12மணியளவில் உணர்வு பூர்வமாக எமது மாவீரர் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

பொதுச்சுடரை reggio emigilia தமிழர் ஒன்றிய பிரதேச பொறுப்பாளர் ஏற்றிவைத்தார், தொடர்ந்து
இத்தாலிய மேற் பிராந்திய தமிழர் ஒன்றியத் தலைவர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

12.30 மணிக்கு பிரான்ஸ், துயிலும் இல்லத்திலிருந்து காணொளித் தொகுப்பும் தலைமைச்செயலக அறிக்கையும் ஒளிபரப்பப்பட சமநேரத்தில் மணியொலிக்கப்பட்டு, அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து இத்தாலிய மேற்பிராந்திய இளையோர் அமைப்புத் தலைவர் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைக்க, மாவீரர்களினது கல்லறைகளுக்கு மாவீரர் குடும்பத்தினர்களால் சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து மக்களாலும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து மாவீரர் நினைவு சுமந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, நிகழ்வில் மாவீரர் ஞாபகார்த்தப்போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு வெற்றி கிண்ணங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்த மூத்த ஊடகவியலாளர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அதனைத் தொடர்ந்து அனைவராலும் மிகவும் உணர்ச்சி பூர்வமாக உறுதிமொழி எடுக்கப்பட்டு, தேசியக்கொடி இறக்கப்பட்டு, தாரக மந்திரத்துடன் நிகழச்சி நிறைவு பெற்றது.

Iitaly1
italy2
italy3
italy4
italy5
italy6

0 Responses to இத்தாலி மேற்ப்பிராந்த்தியத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2009

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com