ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுவை ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். எனவே இதை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் விசாரித்து 3 பேரையும் தூக்கில் போட இடைக்கால தடை விதித்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வக்கீல் ரவீந்திரன் ஆஜராகி, கொலை வழக்குகளில் தூக்கு தண்டனை பெற்ற முல்லர், அசாமை சேர்ந்த பாஸ் ஆகியோரது கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது.
அதன் நிலைமையை பார்த்து குறித்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையை ரத்துச்செய்க் கோரும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து வழக்கு விசாரணையை எதிர்வரும் 30-ந்தேதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
மூவரின் தூக்குத் தண்டனையை ரத்துசெய்யக் கோரிய வழக்கு விசாரணை 30ம் திகதி!
பதிந்தவர்:
தம்பியன்
27 March 2012
0 Responses to மூவரின் தூக்குத் தண்டனையை ரத்துசெய்யக் கோரிய வழக்கு விசாரணை 30ம் திகதி!