நாடு கடந்த தமிழீழ அரசின் நியுசிலாந்துபிரதிநிதியான தேவராஜன் பிரித்தானிய மகாராணியாரால் கௌரவிக்கப்பட்டுள்ளார். இப்புத்தாண்டில் பிரித்தானிய மகாராணியாரால் ஏனைய இரு தமிழர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
புதிய ஆண்டின் தொடக்க விருதுகள் நியுசிலாந்து மற்றும் பிரித்தானியாவிலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்களில் நியுசிலாந்தில் தமிழ் மக்களுக்கு ஆற்றிய உயரிய சேவைக்காக நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதியான ஆறுமுகம் தேவராஜன் அவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் அரச காவல்துறையின் நிர்வாக சேவையில் கடமையாற்றிய இவர் – சிறிலங்கா அரசின் தனிச்சிங்கள சட்டத்தை தொடர்ந்து அப்பதவியை துறந்து நியுசிலாந்தில் குடியேறினார்.
நியுசிலாந்தில் தமிழ் மக்களுக்கான பல்வேறு சேவைகளை ஆற்றிக்கொண்டிருந்த இவர், கடந்த ஆண்டில் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
இவரைத்தவிர பிரித்தானியாவைச்சேர்ந்த செல்லையா யோகமூர்த்தி தமிழ்நாட்டை சேர்ந்தவரும் பின்னர் பிரித்தானியாவில் வசித்துவருபவருமான திருமதி நாராயணன் ஆகியோரும் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் அவர்களால் புதிய ஆண்டிற்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 Responses to நா.க.த. அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானியா மகாராணியாரால் விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டார்!