Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். நீர்வேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி பாலியல் வக்கிரத்துடன் இராணுவச் சிப்பாய் ஒருவர் படைமுகாமிலிருந்து வெளியே பெண்கள் தனித்திருக்க்கும் வீடுகளைத்தேடி , வீடொன்றினுள் உட்பிரவேசித்து யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளார்.

இச்சம்மவமானது நேற்று அதிகாலை நீர்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நீர்வேலி படைமுகாமைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் என அடையாளம் கண்ட பொதுமக்கள் பனைமரத்துடன் கட்டிவைத்து பச்சைமட்டையால் தாக்கியுள்ளனர்.

எனினும் பொதுமக்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விடவில்லை. மோசமான பச்சைமட்டை தாக்குதலுக்கு பின்னர் இன்று காலை 10 மணியளவில் யாழ். கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழ். கோப்பாய் பொலிஸார் யாழ்.நீதிவான் வீட்டீல் ஆஜர்படுத்தினர். ஒரு வாரத்திற்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிமதி ஏ.ஏ ஆனந்தராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

0 Responses to பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சி - பனைமரத்துடன் கட்டிவைத்து பச்சைமட்டையடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com