சிறிலங்காவில் புத்த சமயத்திற்கும், புத்த
சாசனத்திற்கும் அரசியல் யாப்பில் (சாரம் 9ல்) கொடுக்கப்பட்டிருக்கும்
முன்னுரிமை பற்றி சர்வதேச ரீதியாக யாரும் கேள்வி எழுப்பும் வேளைகளில்,
சிறிலங்காவின் தூதுவர்களில் விசேடமாக பௌத்த மதத்தை சார்ந்த தூதுவர்கள்,
அதே யாப்பில் (சாரம் 10, 14 (1)ஈ ல்) யாரும்
விரும்பிய சமயத்தை வெளிப்படையாகவோ பிரேத்தியேகமாகவோ நம்பிக்கை கொள்ளவும்,
வழிபடவும் உரிமையுள்ளதாக கூறுகிறது என்பார்கள். சிறிலங்காவில் நடைமுறை
சம்பவங்கள் இவ் யாப்பில் கூறியவற்றிற்கு எதிர்மாறானவை.
சிறிலங்காவில் மிக அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட “பொதுபலா சேன- பி. பி. எஸ்” எனப்படும் தீவிர அமைப்பின் பிரதம விருந்தினராக பாதுகாப்பு செயலாளரான ஜனதிபதி ராஜபக்ஷவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்தார். இவர் அங்கு உரையாற்றுகையில், பௌத்த பிக்குகளே, சிறிலங்காவையும், பௌத்த சிங்கள இனத்தை
காப்பாற்றுபவர்களென கூறியுள்ளார். இலங்கைதீவில் கிறீஸ்தவர்கள், முஸ்லீம்கள், தமிழர்களுக்கு எந்த உரித்தும் கிடையாது என்பதே பொதுபல சேனவின் கொள்கை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
புத்த பெருமானினால் உருவாக்கப்பட்ட பௌத்த பிரார்த்தனைகளுக்கு அமைய அன்பு, அபிமானம், உயிரினங்களை பாதுகாத்தல், சாந்தம் என்பவை முதன்மை படுத்தப்படுத்துள்ளது. உண்மையான பௌத்த பிரார்தனைகளும் கொள்கைகளும் சிறிலங்காவில்
நடைமுறைபடுத்தப்பட்டிருந்தால், சிறிலங்கா ஒரு பொழுதும் ஐ. நா. மனித உரிமை சபையின் தொடர்ச்சியான இரு கண்டன பிரேரணைகளையோ, இன்னும் இரு வாரங்களில் ஐ. நா. மனித உரிமை ஆணையாளரின் விஜயத்தையோ எதிர்கொண்டிருக்க மாட்டாது.
எதிர்வரும் மூன்று முக்கிய சம்பவங்கள், பல வன்முறைகளும், உரிமை மீறல்களும் திடீரென சிறிலங்காவில் ஒராளவு குறைந்து காணப்பட காரணிகளாக உள்ளனா. ஐ. நா. மனித உரிமை ஆணையாளரின் விஜயம், எதிர்வரும் ஐ. நா. மனித உரிமை சபையின் 24வது 25வது கூட்டத் தொடர்கள், நவம்பர் மாதத்தில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடுகளின் மாகாநாடு என்பவை கூறிப்பிடத்தக்கது. அப்படியானால், சிறிலங்கா தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டுமானால், இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டுமா?
சிறிலங்காவின் ஜனதிபதி, அமைச்சர்கள், பாதுகாப்பு செயலாளர், பௌத்த பிக்குகளினால் தினமும் கூறப்படும் மிரட்டல்களும், அறிக்கைகள் ஒருபுறமும், சிறிலங்கா பாதுகாப்பு
படைகளினாலும் அவர்களது கையாட்களினால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளான – கைது, பாலியல் வன்முறை, ஆட்கடத்தல், சித்தரவதை, படுகொலைகளுடன், முஸ்லீம் மக்கள் மீதும் அவர்களது பள்ளிவாசல்கள், வியாபார நிலையங்கள், சொத்துக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவந்த இன அழிப்பு யாவும் முன்னையவிட குறைந்து காணப்படுகிறது.
இவற்றை குறிப்பிடும் அதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் வெலிவேரிய மற்றும் கடந்த 10ம் திகதி கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவங்களை மறக்கவில்லை. வெலிவேரியவில் கடந்த 1ம் திகதி பொதுமக்களினால் நடாத்தப்பட்ட மாசுபட்டித்த தண்ணீருக்கு எதிரான அமைதி ஊர்வலம் மீது, சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தினால், மூவர் கொலை செய்யப்பட்டும் பலர் கடுமையாக கயப்பட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற மனித உரிமையாளர், சிறிலங்கா இராணுவமே இவை யாவற்றுக்கும் பொறுப்பானவர்களென கூறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவத்தின் பொழுது இராணுவ அதிகாரி ஒருவர், வெலிவேரியவில் சேவையாற்றும் கிறிஸ்தவ கன்னிகாஸ்த்திரி ஓருவரிடம் “பாகிஸ்தானில் கிறிஸ்தவ கன்னிகாஸ்த்திரிகள் பயங்கரவாதிகளுக்கு நன்றாக உதவுகிறார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்” எனச் சேடையாக கூறியுள்ளார். இவ் இராணுவ அதிகாரியின் கருத்தை மையமாக கொண்டு, வெலிவேரியவின் நடைபெற்ற இராணுவத்தினரின் துப்பாக்கி பிரயோகத்தின் காரணிகளை நாம் ஆராய அறிய முடியும்.
சர்வதேசத்தின் பார்வையில்
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனின் விஜயத்தை அடுத்து, 13வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்விருந்த மாற்றங்கள் பற்றிய கதை மௌனித்துள்ளது. இவையாவும் தொடர்ந்து மௌனித்து இருக்குமா என்பதே இன்றைய கேள்வி. முன்பு சிவ்சங்கர் மேனன் மிகவும் சந்தோஷமாக கைகுலுக்கி மிகவும் ஆனந்தமாக சிறிலங்கா ஜனதிபதியுடனும் மற்றைய உத்தியோகத்தர்களுடனும் உறவு கொண்டடிய புகைப்படங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் கடந்த மாதம் இவரது சிறிலங்கவிற்கான விஜயத்தின் பொழுது இவற்றை யாராலும் பார்க்க முடியாவில்லை. சிவ் சங்கர் மேனனின் அகத்தின் அழகு, இந்தியாவின் நிலைபாட்டை எதிரொலிக்கின்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், ஐ.நா. வின் பாதுகாப்பு ஆலோசகர், மனித உரிமை ஆணையாளரின் விஜயத்திற்கான பாதுகாப்பு ஒழுங்குகளை பார்வையிடுவதற்காக சிறிலங்கா சென்றிருந்தார். ஐ.நா. மனித உரிமை ஆணையாளாரர் தனது விஜயத்தின் போது சிறிலங்கா விமானப்படையின் விமானத்தையோ அல்லது கெலிக்கொப்டரையோ பாவிக்கமாட்டார் என்பதை ஐ.நா. பாதுகாப்பு ஆலோசகர், சிறிலங்காவின் உத்தியோகத்தர்களுக்கு அறிவித்திருந்தார்.
வேடிக்கை என்னவெனில், 2009ம் ஆண்டு மே மாதம், ஐ.நா. வின் செயலாளர் நாயகம் சிறிலங்காவிற்கு விஜயம் செய்த வேளையில் இப்படியாக ஐ.நா. வின் பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்காவிற்கு சென்று பாதுகாப்பு ஒழுங்குகள் பார்வையிட்டது இல்லை. கொழும்பிலிந்து வெளியாகும் ஆங்கில ஊடகத்தின் பிரகாரம் ”ஐ.நா. பாதுகாப்பு ஆலோசகரின் விஜயம் அவர்களுக்கு உள்ள பீதியை தளர்த்துமென” கூறியுள்ளது.
சிறிலங்காவில் இன்று நடைபெறும் “காவி ஜனநாயம்”, பாரளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமையாளர்கள், கிறீஸ்தவ (விசப்) மேற்றிராணியார் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வீதி விபத்தாலான கொலை, கொலை முயற்சியினால் சிறிலங்கா இப்படியான நற்பெயரை சர்வதேச ரீதியாக பெற்றுள்ளது.
கடந்த மாதம் நியூயோர்க்கில் கூடிய காணமல் போவோர் பற்றி ஆராயும் ஐ. நா. குழு அண்மையில் உலகில் காணமல் போனோர் பற்றி ஆராய்வு செய்யப்பட்ட 28 நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதை அறிந்து பதட்டம் அடைந்த ஜனதிபதி ராஜபக்ஷா, முன்னைய ஜனதிபதிகள் போன்று, வழமைபோல் தானும் காணமல் போவோர் பற்றி ஆராய்வதற்கு ஓர் ஆணைக்குழுவை நியமிப்பதாக கூறியுள்ளார். இதில் வேடிக்கை என்னவெனில் முன்னைய ஜனதிபதிகளினால் நியமிக்கப்பட்ட சில ஆணைக்குழுக்கள் காணமல் போவோர் பற்றி ஆராயாவுமில்லை அறிக்கை சமர்ப்பிக்கவுமில்லை. சில ஆணைக்குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் யாவும் தேடுவார் அற்று ஒதுக்கப்பட்டுள்ளன.
மிக அண்மையில் ஜனாதிபதி ராஜக்சவினால் ஊவா மாகணத்தில் வாழும் வேடர்களின் தலைமை பிரதிநிதிக்கு, விசேட புள்ளிகளுக்கு வழங்கப்படும் வாகனம் ஒன்றை சாரதியுடன் இலவச எரிபொருள் வசதியுடன் வழங்கியுள்ளர்.
இதனுடைய உண்மையான நோக்கம் என்னவெனில், தமது நாட்டின் வாழும் பூர்வீக மக்களது தேவையை, தமது அரசு சரிவர கவனிப்பதாக, சர்வதேச ரீதியாக பிரசார செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி ராஜக்சவின் இவ் நடவடிக்கை, பூர்வீக மக்களுக்கான ஐ. நா. ஓழுங்கு முறையை திருப்திப்படுத்துவதற்கு எதிர்மாறாக, வேடர்களின் கலாசார சுதந்திரத்தின் இடையூறாகவே ஏற்றுக்கொள்ளப்படும்.
கிளிநொச்சி, ஆனையிறவு வழியாக யாழ்பாணம் செல்பவர்கள், தெருவின் இரு ஓரங்களிலும் புத்தரின் பாரீய சிலைகளையும், பூஞ்செடிகளையும் பார்க்க கூடியதாகவிருப்பதாக கூறுகின்றனர். ஆனால் வன்னியின் உள்ளே சென்றவர்களினால் கூறப்படும் கதைகள் மிகவும் கவலைக்குரியது.
பொதுநலவாய மாநாடு
எதிர்வரும் வடமாகணச் சபை தேர்தல், ஐ.நா. மனித உரிமை ஆணையாளாரது விஜயம், அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ. நா. மனித உரிமை சபையின் 24வது கூட்டத் தொடர் நாவம்பர் மாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாகாநாடு ஆகிய சில நிகழ்வுகள், சிறிலங்காவிற்கு பெரும் தலையிடியை கொடுத்துவருகிறது.
சிறிலங்காவில் நவாம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டை தற்பொழுது நிறுத்துவது முடியாத காரியம்;. ஆகையால் இம் மகாநாட்டை எமக்கு சதாகமாக நாம் பாவிக்க வேண்டும். இவற்றை புலம்பெயர் வாழ் தமிழர், தமிழ் சங்கங்களினால் செய்ய முடியும்.
ஒன்று, இவ் மகாநாட்டில் கலந்து கொள்ளும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள், சிறிலங்கவினது மனித உரிமை மீறல்கள், இறுதி யுத்தத்தின் பொழுது நடைபெற்ற போர்க்குற்றம், சர்வதேச மனிதாபிமான குற்றம் போன்றவற்றை, சிறிலங்காவில், நடைபெறும் பொதுநலவாய நாட்டு மேடைகளிலேயே கண்டிப்பதற்கான பிரசார ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும். இவ் வழிமுறை நிச்சயம் சிறிலங்காவிற்கு பெரும் சங்கடத்தை உருவாக்கும்.
அடுத்து, சிறிலங்கவில் பொதுநலவாய நாடுகளின் மகாநாடு நடைபெறும் வேளையில், பிரித்தானியாவில் லண்டனில் உள் பொதுநலவாயத்தின் செயலாகம் முன்பாக அமைதிப் பேராணிகளை நடத்துவதுடன், ஐரோப்பா மற்றைய நாடுகளில் உள்ள புலம்பெயர் வாழ் தமிழர், தமிழ் சங்கங்களினால் தமது நாடுகளில் உள்ள குறிப்பிட்ட சில பொதுநலவாய அங்கத்துவ நாடுகள் தூதுவரலாயங்கள் முன்பாக, அமைதியான பேரணிகளை நடத்துவதன் மூலம் சிறிலங்காவினது “காவி ஜனநாயத்தை” உலகிற்கு பறை சாற்ற முடியும்.
முஸ்லிம்களது நிலை
மேலே கூறப்பட்ட சில நிகழ்வுகள், சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பல சம்பவங்களுக்கு ஓர் இடைவேளையை கொடுத்துள்ளது. ஆனால் தமிழர்களை பாவித்து எப்படியாக தமிழ் தேசியம் அழிக்கப்படுகிறதோ, அதே மாதிரியாக, தற்பொழுது முஸ்லிம் தலைவர்களை பாவித்து முஸ்லிம் சமுதாயம் அழிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் மார்ச் மாதம் ஐ. நா. மனித உரிமை சபையின் 19வது கூட்டத் தொடரில், சிறிலங்கா மீது ஓர் கண்டனப் பிரேரணை கொண்டு வருவதற்கான ஒழுங்குகள் நடைபெற்ற வேளையில், ஜனதிபதி ராஜபக்சவினால், 100 பேர் அடங்கி ஓர் மாபெரும் குழு ஜெனிவாவிற்கு அனுப்பப்பட்டதை பலர் அறிந்திருப்பார்கள். இதில் பலர் அறியாத உண்மை என்னவெனில், இவ் குழுவில், மூன்று முஸ்லிம் அமைச்சர்கள் (ரவூப் ஹக்கீம், ரீசாத் பதியூதீன், ஹிஸ்புல்லா) உட்பட, 60வீதத்திற்கு மேலானோர் முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவர்கள்.
இலங்கையில் நீதி அமைச்சாரான ஹக்கீம், 2012ம் ஆண்டு பெப்ரவரி, மார்ச் மாதங்களில் உலகில் பல இஸ்லாமிய நாடுகளுக்கு ஜனாதிபதி ராஜபக்சவின் பிரதிநிதியாக விஜயம் செய்து, சிறிலங்காவின் ஜனநாயகம் பற்றியும், அங்கு எப்படியாக சிறுபான்மை இனத்தவர்கள் உரிமைகளுடன் வாழுகிறார்கள் என்பது பற்றியும் விளக்கங்கள் கொடுத்து வந்தார். ஆனால் 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி மனித உரிமை சபையினால் சிறிலங்கா மீது வெற்றிகரமாக கண்டனப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதும், ஹக்கீம் அவர்கள் மனித உரிமை சபைக்கு வெளியில் நின்று, கவலையும் கோபமும் அடைந்ததை நாம் நேரில் பார்க்கக் கூடியதாகவிருந்தது.
துரதிஷ்டவசமாக, 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டம்புளையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள், ஹக்கீம் கூறியது யாவும் அவரது சுயநலத்தின் அடிப்படையில் கூறப்பட்ட கருத்துக்கள் என்பதை, இஸ்லாமிய நாடுகள் தெரிந்து கொண்டன.
தம்புளை சம்பவங்கள், ராஜபக்சவிற்காக ஜெனிவா சென்று போர்க் கொடி தூக்கிய மூன்று முஸ்லிம் அமைச்சர்களையும் மற்றையவர்களையும் பெரும் அவமானத்தில் தள்ளியது. அவ்வேளையில் சகல முஸ்லிம் அமைச்சர்களும் ஒன்றுபட்டு தம்புளை சம்பவங்களை எதிர்த்து ராஜினமா செய்திருப்பார்களெயானால், அன்று இஸ்லாமிய நாடுகள் மட்டுமல்லாது, முழு உலகமே விழித்திருக்கும். என்ன செய்வது, ராஜபக்சக்களினால் மிக திறம்பட நடாத்தப்படும் “பிரித்து ஆளும் முறை”, முஸ்லிம் அமைச்சர்களை ராஜினமா செய்ய அனுமதிக்கவில்லை.
இங்கு தம்புளையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்களை எழுதும் வேளையில், சிலர் என்ன தம்பளை பற்றி எழுதுகிறார், யாழ்ப்பாணத்து முஸ்லிம்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் செய்தது பற்றி ஒன்றும் எழுதவில்லை என எண்ணுவார்கள். இது பற்றி முன்பு பல முறை எழுதியவற்றையே மீண்டும் இங்கு தருகிறேன்.
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் 1990ம் ஆண்டு வெளியேற்றப்பட்டு, புத்தாளத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்பது யாரும் மறைக்க முடியாத உண்மை. இத்தவறுக்காக தமிழீழ விடுதலை புலிகளின் காலம் சென்ற அரசியல் ஆலோசகர், திரு அன்ரன் பாலசிங்கம் பல தடவைகள் பொது இடங்களில் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில், 1995ம் ஆண்டு முதல், தமிழீழ விடுதலை புலிகள் முற்று முழுதாக யாழ் குடாநாட்டிலிருந்து வெளியேறி வன்னிப் பிரதேசங்களிலேயே நிலை கொண்டிருந்தார்கள்.
அப்படியானால், யாழ்பாணத்து முஸ்லிம்களை, மீண்டும் அவர்களது இடங்களில் குடியேறவிடாது தடுத்தது யார்? புத்தளத்திற்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையில், துறைமுக விமான நிலைய வசதிகள் உள்ளதுடன், ஏ9 பதை 2002ம் ஆண்டு முதல் திறந்து விடப்பட்டுள்ளது. உண்மை என்னவெனில், சிறிலங்கா அரசு, தமிழீழ விடுதலை புலிகள் மீது தமது சர்வதேச பிரசாரத்தை மேற்கொள்வதற்காகவே முஸ்லிம்களை மீண்டும் யாழ்ப்பாணத்து குடியேறவிடாது தடுத்தனர்.
பொறுப்பு வாய்ந்த அரசுகள் எப்படியாக இவ் மக்களை கடந்த 25 வருடங்களாக மீண்டும் குடியேறவிடாது தடுப்பதுடன், யாழ்ப்பாணத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத சிங்கள மக்களை குடியேற்றி வருகின்றனர் என்பதை யாவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபை மண்டபத்தில், சிறிலங்காவின் தூதுவரலாயத்தினால் ஓர் கூட்டம் கூட்டப்பட்டது. இவ் கூட்டத்தில், சிறிலங்காவின் அமைச்சர்களான – மகிந்த சமரசிங்க, கேகலிய ரம்புகலை, அத்துடுவ செனிவரத்தின, டக்ளஸ் தேவனந்தா ஆகியோருடன், ஜனதிபதியின் செயலாளர் லாலித் வீரதுங்கவும் கலந்து கொண்டனர்.
அவ்வேளையில், யாழ்ப்பாணத்து முஸ்லிம்களை, ஏன் மீண்டும் அவர்களது இடங்களில் குடியேறவில்லையென்று நான் கேள்வி எழுப்பியதும், பதில் கூறமுடியாத அமைச்சர்கள் என்னுடன் கேள்வியுடன் சம்பந்தப்படாத தர்க்கத்தை நடாத்தியதை அங்க சமூகமளித்திருந்த பல நாட்டு ராஜதந்திரிகளும், ஐ. நா. வின் முக்கிய புள்ளிகளும் நேரில் கண்டுகொண்டார்கள். யாழ்ப்பாணத்து முஸ்லிம் மக்களது நிலை இப்படியாகவே காலம் கடத்தப்பட்டு வருகிறது.
முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்
இளைப்பாறிய பிரதம நீதிபதி, சி. வி. விக்னேஸ்வரன் அவர்கள் வடமாகண சபையின் முதலாமைச்சர் பதவிக்கு, தமிழர் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட முன் வந்துள்ளமை, பல துயரங்கள் துன்பங்களில் வாழும் தமிழர்களுக்கு ஓர் ஆறுதலை கொடுக்கும் செய்தியாகும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
முதல் முதலாக நடைபெறவுள்ள வடமாகண சபையின், முதலமைச்சர் பதவிக்கு, இளைபாறிய ஒரு பிரதம நீதிபதி போட்டியிடுவது என்பது தமிழர்களுக்கு பெருமை தரும் விடயம். இதேவேளை தமிழர் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் சகலரும், நிச்சயம் பெரும்பான்மை வாக்குகளை பெற்று, வடமாகாண சபையை தமிழர் வாசம் ஆக்கிகொள்வார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
வடமாகாண சபையின் முதலமைச்சர் ஒருவர் இளைப்பாறிய பிரதம நீதிபதி என்பதனால், சர்வதேசத்திடமிருந்து அதற்குரிய அங்கீகரம் கிடைப்பதுடன், சிங்கள அரசியல்வாதிகளுடன் நிகராக நின்று தனது கடமைகளை நிறைவேற்றும் ஆளுமையையும் திரு. விக்னேஸ்வரனுக்கு உள்ளது.
இலங்கை தமிழரின் சரித்திரத்தில் சில தமிழர்கள் பிரதம நீதிபதியாக கடமையாற்றி, இளைபாறி, தமது குடும்ப வாழ்க்கையுடன் மட்டுமே காலத்தை கழித்துள்ளார்கள். இவர்களில் ரி. டபிள்யூ. ராஜரத்தினம் என்பவர் மட்டுமே, கடமையிலிருந்து இளைபாறியதும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய பாராளுமன்ற உறுப்பினராக 1989ம் ஆண்டு நியமனம் பெற்றார்.
கடந்த மாதம் 21ம் திகதி, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு, செவ்வி வழங்கிய திரு விக்கினேஸ்வரன் பின் வருமாறு கூறியுள்ளார்.
பிரிவினையா, சுயநிர்ணயமா என்பவை யாவும் நீண்டகால திட்டங்கள். நான் சொல்வது என்னவெனில் மக்களுக்காக செய்ய வேண்டிய குறுகிய காலத் திட்டம். வடக்கில் உள்ள பொதுமக்கள் தமது உறவினர்களை இழந்துள்ளனர். இவர்கள் என்ன நடந்துள்ளது பற்றி தெரியாதுள்ளனர். அவர்களது சொத்துக்கள் யாவும் அபகரிக்கப்பட்டு, வேலை இல்லாமல் உள்ளனர்.
இராணுவத்தினரால் தன்னிச்சையாக அபகரீக்கப்பட்ட இவ் நிலங்களை, தெற்கிலிருந்து வந்த மக்கள் பயிர் செய்வதுடன், அதன் உற்பத்திகளை, உண்மையான நிலச் சொந்தக்கரர்களுக்கே விற்பனை செய்கிறார்கள்.அங்கு ஏறக்குறைய 60.000 விதவைகள் உள்ளார்கள். இவர்களுக்குகான உதவிகளை செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளோம். இவர்கள் விடயங்களில் அனுதபாம் உள்ள ஒருவர் ஆளுநாகராக இருப்பது விரும்பத்தக்கது. இவற்றுக்கு எதிர்மாறாக, இளைபறிய இராணுவ அதிகாரி சந்திரசிறி இன்றும் இராணு அதிகாரி போன்றே உள்ளார் என, திரு. விக்னேஸ்வரன் தனது செவ்வியில் கூறியுள்ளார்.
திரு. விக்னேஸ்வரன் அவர்கள் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை எதிர்ப்பவராகவும், ஓர் இராணுவ அதிகாரி ஆளுனராக இருப்பதை விரும்பாதவராகவும் கணப்படுகிறார்.
குறைகள்
இளைப்பாறிய பிரதம நீதிபதி விக்னேஸ்வரன் பற்றி, சில விசமத்தனமான குறைகளை, ராஜபக்சவின் கட்சியே வடமாகாணச் சபையை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, கடந்த பாரளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் தோல்வி கண்ட சிலரினால் உருவாக்கப்பட்டு, புலம்பெயர் தேசங்களில் உள்ள சில கோடாரிக் காம்புகளினால் பரப்பப்பட்டு வருகிறது.
ஒருவர் கூறுகிறார் திரு. விக்னேஸ்வரனுக்கு நல்லூர் கோயிலை மட்டுமே யாழ்ப்பாணத்தில் தெரியுமாம். இன்னுமொருவர் கூறுகிறார் இவரது பிள்ளைகள் சிங்களவர்களை திருமணம் செய்துள்ளனராம். திரு விக்கினேஸ்வரன் அவர்கள்,
வடமாகணத்தில், மல்லாகம், சாவகச்சேரி, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் கடமையாற்றியவர். அப்படியானால் இவர் தினமும் கொழும்பிலிருந்து விமானம் மூலம் இவ்விடங்களுக்கு வந்து சென்றரா? சில பௌத்த சிங்களவாதிகளின் பிழையான நடைமுறைக்காக, தமிழர், சிங்கள மக்களை வெறுக்க வேண்டுமா? உண்மையை கூறுவதனால், எம்மில் சிலருக்கு மேலாக, தமிழரின் சுயநிர்ணய உரிமையில் மிக நீண்டகாலமாக அக்கறை கொண்ட சில சிங்களவர்கள் உள்ளார்கள் என்பதை நாம் மறக்க முடியாது.
அடுத்தபடியாக கூறப்படும் குறை மிகவும் வேடிக்கையானது. திரு. விக்னேஸ்வரன் சில கொலைகளை கண்டித்தாராம். ஓர் பிரதம நீதிபதி கொலையை கண்டியாது, தொடர்ந்து கொலையை செய்யுங்களென கூறுவதா? இவ்வுலகில் யார் தான் கொலைகளை செய்யுங்களென கூறுவார்கள். சுருக்கமாக கூறுவதனால் “கழுதைக்கு விளங்குமா கற்பூர வாசனையை?”
ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்

0 Responses to மீண்டும் எப்பொழுது தமது மௌனத்தை கலைப்பார்கள்?