இலங்கைக்குச் சுற்றுலா வீசாவில் சென்றிருந்த தமிழக வழக்கறிஞர்கள் இருவர் இராணுவப்புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டுள்ளதாக பலத்த சந்தேகங்கள் தோன்றியுள்ளது.
சென்னையின் பிரபல வழக்கறிஞரான கயல் எனப்படும் அங்கையற்கண்ணி மற்றும் அவரது உறவினரான திருமலை ஆகிய இருவருமே கடத்தப்பட்டிருப்பதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் தற்போதைக்குத் தெரியவில்லை.
இலங்கையில் போர் நிறுத்தம் கோரி நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடக்கம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான அனைத்துப் போராட்டங்களிலும் அங்கயற்கண்ணி முழுவீச்சுடன் கலந்து கொண்டிருந்தார்.
இலங்கையில் நிலைமைகள் சீராகி வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அவரும் அவரது உறவினரும் சுற்றுலா வீசா மூலமாக இலங்கை சென்றிருந்த நிலையில், தற்போது அவர்களைப் பற்றிய எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை.
அதன்காரணமாக இலங்கையின் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களைக் கடத்தியிருக்கலாம் என்று பல தரப்பினராலும் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to தமிழக வழக்கறிஞர்கள் இலங்கையில் கடத்தல்