புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளுக்கு சவால் விடுக்கும் வகையிலேயே மகிந்த இந்த திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசிய உதவி செயலாளர் ரிச்சட் அமிட்ராஜை சந்தித்தன் பின்னரே அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டார்.
ரிச்சட் அமிட்ராஜ் தற்போது இலங்கையில் தங்கி இருக்கும் காலப்பகுதிலேயே, ஜனாதிபதியை அமெரிக்கா சென்றுவர அவரது ஆலோசகர்கள் கோரியதைத் தொடர்ந்து, இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் ரிச்சர்ட் அர்மிட்ராஜும், ஜனாதிபதி அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ மாட்டார் என உறுதி வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையிலேயே அவர் இங்கிலாந்தில் புலம்பெயர்ந்த தமிழர்களால் கிடைத்த அவமானத்துக்கு பழி தீர்ப்பதற்காக அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Responses to புலம் பெயர் தமிழ் மக்களின் பலத்தை சோதிப்பதற்காகவே மகிந்த அமெரிக்கா விஜயம்