Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புத்தாண்டு தினத்தில் கிளிநொச்சியிலிருந்து கடத்திசெல்லப்பட்ட ஐந்து பேர் வவுனியாவில் வைத்து காப்பாற்றப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் ஒருவரான கஜீவன் புவனேந்திரன் என்பவரால் அவரது உறவினர்களுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியை(SMS) தொடர்ந்தே அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு தினமான நேற்று சனிக்கிழமை மாலை ஐந்து முப்பது மணியளவில் கிளிநொச்சி நகர்ப்பகுதியில் வைத்து பச்சை உடை தரித்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார். தனது சொந்த ஊரான இரத்தினபுரம் பகுதியிலிருந்து கிளிநொச்சி நகர் நோக்கி வந்த இவரே இவ்வாறு கடத்தப்பட்டு 9 வீதியூடாக வவுனியா நோக்கி கொண்டுசெல்லப்பட்டார்.

வவுனியாவில் வைத்து சிறிலங்கா காவல்துறையின் உதவியுடன் இக்கடத்தல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோதும் கடத்தியவர்கள் பற்றியோ கடத்தப்பட்டவர்கள் பற்றியோ விபரங்களை வெளியிட காவல்துறை மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தமிழ்மக்கள் மீது தொடரும் வன்முறைகளின் பின்னனியில் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விசேட குழு ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to புத்தாண்டு தினத்தில் கிளிநொச்சியில் கடத்தப்பட்ட ஐவர் எஸ்எம்எஸ் மூலம் காப்பாற்றப்பட்டனர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com