இவ்வாறு பிரித்தானியாவிற்கு தனிப்பட்ட விஐயமாக சென்ற போது பிரித்தானிய உறவுகள் மேற்கொண்ட தொடர் மக்கள் மயப்படுத்தப்பட்ட மற்றும் சட்ட நடவடிக்கைகளால் மகிந்தா பிரித்தானியாவை விட்டே ஒடியது எம் நினைவில் பசுமையாகவே உள்ளது.
இது எமது தருணம். அமெரிக்க உறவுகள் ஒழுங்கமைப்புகளை அறியத்தரும் வரை எமது களத்தைத் திறப்போம். வாருங்கள் பெரும் எண்ணிக்கையில் வாருங்கள். கொலை வெறியனைக் கூண்டில் ஏற்றுவோம். சர்வதேச மன்னிப்புச் சபையும் அமெரிக்காவில் கைது செய்து போர் குற்ற விசாரணையை வலியுறுத்தியுள்ள நிலையில் நாமும் வலியுறுத்துவோம்.
இடம்: அமெரிக்க துணைத்தூதரலாயம், ரோரன்ரோ
360 University Avenue. (Subway: St. Patrick)
காலம்: வெள்ளிக்கிழமை, சனவரி 20, 2011
நேரம்: பிற்பகல் 2 மணிமுதல், மாலை 7 மணிவரை
ரோரன்ரொவில் நாம் மூட்டும் நீதிவேண்டிய தீ, அமெரிக்கா முழுமையாகப் பரவட்டும்
அலைகடலென வாரீர்.. அது எங்கள் களம்.. நீதிவேண்டிய போர்க்களம்..
மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை - 1-866-263-8622
ரோரன்ரொவில் மூட்டும் நீதி அமெரிக்கா முழுமையாகப் பரவட்டும்