Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் 1995, 1996ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து தங்கியுள்ள மக்களுக்கு லைக்கா நிறுவனத்தினால் சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் 68 வீடுகளும், புளியங்குளம் பரிசங்குளம் பகுதியில் 82 வீடுகளும் மொத்தமாக 150 வீடுகள் அமைக்கபட்டுள்ளன.

இன்று (28.04.2017) அங்கு சென்று குடியேறுவதற்கு இம் மக்களுக்கு திறப்புக்கள் மாவட்ட செயலகத்தினால் கையளிக்கவுள்ளதாக தெரிவித்ததுடன் இப்பகுதியில் சென்று குடியேற முடியாது தமக்கான அடிப்படை வசதிகள் மின்சாரம், போக்குவரத்து, தண்ணீர், வைத்தியசாலை இன்றி அப்பகுதியில் சென்று குடியேற முடியாது தாம் கூலி வேலைகளையே நம்பி இருப்பதால் அங்கு சென்று வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது? என்று தெரிவித்து இன்று காலை பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலிருந்துத 97குடும்பங்கள் செல்ல மறுத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை தொடர்பு கொண்ட போது, இவ் மக்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அங்கு சென்று குடியேறினால் இவர்களுக்கான மேலதிக வசதிகளையும் எங்களால் வழங்க முடியுமேன தெரிவித்தார்.

0 Responses to லைக்கா வீட்டுத்திட்டத்தில் எங்களால் வாழ முடியாது: மக்கள் ஆர்ப்பாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com