தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை புரிந்த மகிந்த ராஜபக்ஷேவையும், அவரது சகாக்களையும் அமெரிக்க அரசு கைது செய்து, அவர்மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும் என்று பிரான்ஸ் தமிழீழ மக்களவை ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலில் கொட்டொலிகளை முழங்கினார்கள்.
22 ஜனவரி 2011 சனிக்கிழமை பிற்பகல் பிரான்ஸ் தமிழீழ மக்களவை ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு, தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை புரிந்த சிங்கள அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஷேவையும், அவரது சகாக்களையும் அமெரிக்க அரசு கைது செய்து, அவர் மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும் என்ற கொட்டொலிகளை முழங்கினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், அமெரிக்க அரசுக்கான மனு ஒன்று அமெரிக்க தூதராலயத்தில் கையளிக்கப்பட்டது.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இலங்கைத் தீவில் இடம்பெற்ற தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் கொல்லப்பட்ட, அல்லது காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,46,679 பேர் என மன்னார் ஆயர் அருட்திரு ஜோசப் இராயப்பு ஆண்டகை அவர்கள் சிறிலங்கா அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு முன்நிலையில் சாட்சியம் அளித்துள்ளார்.
அவர் இதற்கான ஆதாரங்களையும் அங்கு சமர்ப்பித்துள்ளார். சிறிலங்கா அரச படைகளால் கொல்லப்பட்டவர்கள் குறித்த இறுதித் தகவலாக இதனைக் கொள்ளலாம்.
இறுதி யுத்தத்தில் மட்டும் படுகொலை செய்யப்பட்டவர்களின் தொகை இதுவாக இருந்தால், கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தங்களின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களது தொகையுடன் சேர்த்தால், சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது நடத்திவரும் இன அழிப்பு யுத்தத்தில் இதுவரை மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் பலிகொள்ளப்பட்டுள்ளார்கள்.
தற்போதைய சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ஷே காலத்திலேயே அதிக அளவு தமிழர்கள் பலியாகியுள்ளனர். அவரை, ஈழத் தமிழர்களை இன அழிப்புச் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்வதுடன், அமெரிக்க பிரஜா உரிமையுடைய அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷே மீது அமெரிக்க சிவில் சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரான்சில் 2009 மே 18 ற்குப் பின்னர், வாரம் தோறும் உலக நாடுகளிடம் நீதி கோரித் தொடர் போராட்டங்களை நடாத்திவரும் பிரான்ஸ் தமிழர் பேரவையின் தலைவர் திருச்சோதி திருக்குலசிங்கம் அவாகள் கருத்துத் தெரிவித்தபோது,
எமது மக்களது விடுதலைப் போராட்டமும், எதிர்கொண்ட இழப்புக்களும், நாளை மறந்த விடயமாக மாறிவிடக் கூடாது. நைஜீரியாவில் பைபர (Biafra Igbo) மக்கள் விடுதலை போரரட்டம் போல் எமது போராட்டமும் தோல்வியில் முடிந்து விடக்கூடாது. சிறிலங்கா அரசு சர்வதேச நியமங்களை மீறி, அரச சார்பற்ற அமைப்புகளையும், தொண்டு நிறுவனங்களையும், ஊடகவியலாளர்களையும் வெளியேற்றி ஈவிரக்கமற்ற இனப் படுகொலையை எமது மக்கள் மீது நடாத்தியதோ, அதேபோல் நைஜீரிய அரசு 1967 - 1970 களில் 10,00,000 மக்களை பட்டினி போட்டும், இராணுவ பலம் கொண்டும் அந்த இன மக்களின் சுயநிர்ணய உரிமை போரரட்டத்தை அழித்தார்கள்.
இந்த நிலமை எமது மக்களுக்கும் தொடர்வதை அனுமதிக்க முடியாது. சிங்கள அரசு, சுமார் நான்கரை இலட்சம் மக்கள் ஒரு சிறு கடற்கரை நிலத்திற்குள் அடைத்து, அவர்களது தொகையை உலக நாடுகளுக்கு 70,000 ஆக அறிவித்து உணவு, மருந்துத் தடைகளை ஏற்படுத்தி அந்த மக்களைப் பசியாலும், தாகத்தாலும், மருத்துவ வசதிகள் கிடைக்காமலும் துடிதுடித்துச் சாக வைத்தது. அதேபோல் இனிமேலும் நடக்காது என்று யாரும் உறுதியாகச் சொல்ல முடியாது. நைஜீரிய பைபர மக்கள் போல் நாமும் அழிந்து போக முடியாது.
உலக நாடுகள் நைஜீரியாவில் பைபர (Biafra) பிரதேசத்தை சேர்ந்த இக்போ (Igbo) இன மக்களுக்கு நடந்த அவலங்களைப் படிப்பினையாகக் கொண்டு, அந்த நிலை ஈழத் தமிழர்களான எமது மக்களுக்கும் நடந்துவிடக் கூடாது என்ற சிந்தன்னையுடன் நாம் எமது வெகுஜன போராட்டங்களையும் அரசியல் போராட்டங்களையும் வேகப்படுத்த வேண்டும்.
எதிர்வரும் பெப்ரவரி 04 சிங்கள அரசின் சுதந்திர தினத்தை நிராகரித்து, சிறீலங்கா அரசை புறக்கணிக்கும் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் எனத் தெரிவித்தார்.

0 Responses to பிரான்சில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் (படங்கள் இணைப்பு)