Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உணவு, மருத்துவவசதி எதுவுமில்லாமல் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் தவிக்கிறார்கள் என்றும் அவர்கள் இங்குள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்றும் நேரில் சந்தித்துத் திரும்பிய சென்னை பெண் சட்டத்தரணி கூறினார்.

இலங்கையில் நடைபெற்ற போருக்குப் பிறகு அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் நிலை குறித்து அறிந்து வருவதற்காக சென்னை மேல்நீதிமன்ற பெண் சட்டத்தரணி அங்கயற்கண்ணி, நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த திருமலை ஆகியோர் கடந்த வாரம் சென்றனர். அங்கு இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டனர்.

கடும் போராட்டத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டு சென்னை திரும்பினர். சென்னை திரும்பிய அவர்கள் சனிக்கிழமை நிருபர்களுக்குப் பேட்டியளித்தனர்.

பெண் சட்டத்தரணி அங்கயற்கண்ணி கூறியதாவது:

கடந்த 12 ஆம் திகதி நள்ளிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கை புறப்பட்டோம். மறுநாள் காலை கொழும்பு விமான நிலையத்தில் இறங்கினோம். இலங்கையில் போர் தாக்குதலுக்குப் பிறகு அங்குள்ள தமிழ் மக்களின் மனநிலையை அறிந்துவரும் எண்ணத்தில்தான் சென்றோம்.

அங்கு இலங்கை அரசின் பாதுகாப்புத் துறையில் முழுமையான அனுமதி பெற்று 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை வவுனியா,மட்டக்களப்பு கடல்கோளால் பாதிக்கப்பட்ட இடங்கள், கிளிநொச்சி, முல்லைத்தீவு, நவாலி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலுள்ள தமிழர்களை சந்தித்துப் பேசினோம்.

தமிழர்கள் உதவி

அங்குள்ள தமிழர்களுக்கு அடிப்படை வசதியெதுவும் கிடைக்கவில்லை. முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு,தண்ணீர்,மருத்துவ வசதி எதுவும் கிடைக்கவில்லை. தமிழ் குழந்தைகளுக்கு அங்கு பள்ளிகளே இல்லை.

அங்குள்ள தமிழர்கள் இந்திய அரசின் உதவியை எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அங்கு கை,கால்கள் இழந்த குழந்தைகளுக்குச் சென்னையில் சிகிச்சையளிக்க முடியுமா? எனக் கேட்கிறார்கள்.

கிளிநொச்சியில் தமிழ் மக்கள் அகதிகளாக இன்னும் உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் ஆண்களே இல்லை. பெண்களும் குழந்தைகளும் கை,கால்கள் இல்லாத நிலையில் கண்கள் குருடான நிலையில்தான் இருக்கிறார்கள். ஊனமில்லாத குடும்பத்தையே அங்கு பார்க்க முடியவில்லை.

மொத்தத்தில் அங்கு தமிழ் இனம் அழிவைச் சந்தித்துள்ளது. முல்லைத்தீவு பகுதிக்கு சென்றோம். அங்கு பஸ் வசதி, மின்சார வசதி எதுவும் இல்லை. இரவு நேரத்தில் இருட்டில் நடந்து சென்றோம். அங்கு ஒவ்வொரு இடத்திலும் இராணுவத்தினர் குழுவாக நின்று கொண்டு விசாரிக்கிறார்கள்.

பிரபாகரனின் தாயார்

தமிழர்கள் வீடுகள் எல்லாம் வானம் பார்த்த வீடுகளாக உள்ளன. இராணுவச் சிறையில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வீடு இடிந்து கிடந்ததைப் பார்த்தோம்.

அவரது தாயார் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து நாங்கள் வருவதாக கூறியதும், அவரது கண்ணில் இருந்து கண்ணீர் மட்டும் வடிந்தது. அவரால் பேச முடியவில்லை.

வவுனியா அருகே உள்ள ஓமந்தை என்ற இடத்திற்கு 18 ஆம் திகதி வந்தபோது அங்குள்ள சோதனைச் சாவடியில் எங்களிடம் விசாரித்தனர். பின்னர் உளவுப் பிரிவு பொலிஸார் எங்களைக் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பயங்கரவாத விசாரணை துறையில் எங்களை அழைத்துச் சென்று காவலில் வைத்தனர். அதன் பின்னர் நீதிபதியிடம் எங்கள் நிலையை விளக்கியபின் விடுவிக்கப்பட்டோம்.

0 Responses to தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் அழுதார்! ஊனமில்லாத குடும்பங்கள் இல்லை!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com