தமிழக மீனவர் பாண்டியன் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு இந்திய அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளர் வை. கோபாலசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த செயலை மன்னிக்க முடியாது. இது கடந்த 30 வருடங்களாக இடம்பெற்று வரும் செயலாக மாறிவிட்டது.
வேறு மாநில மீனவர்களுக்கு இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்டிருந்தால், மத்திய அரசாங்கத்துக்கு எதிராக அந்த மாநிலங்கள் பாரிய எதிர்ப்புகளை வெளியிட்டிருக்கும். எனினும் தமிழக அரசாங்கம் எந்த ஒரு எதிர்ப்பு நடவடிக்கைக்கும் தயார் இல்லை என கோபாலசாமி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர், கச்சத்தீவில் வைத்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டப்பட்டுள்ளமையையும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் உட்பட்டோரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

0 Responses to மீனவரின் கொலைக்கு மத்திய அரசாங்கமே பொறுப்பு: வைகோ