ஊடகங்களில் தமது பயணம் குறித்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, கோத்தபாய ராஜபக்ஷ தமது அமெரிக்க விஜயத்தை ஒத்தி வைத்துள்ளதாக லங்கா வெப் நியூஸ் இணைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இஸ்ரேல் மற்றும் லிபியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டிருந்த கோத்தபாய ராஜபக்ஷ, அதன் பின்னர் அங்கிருந்து அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
எனினும் அவரது விஜயம் குறித்;த தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியதைத் தொடர்ந்து, அவர் தமது விஜயத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமை கொண்டுள்ளமை, அமைச்சர் விமல் வீரவன்சவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இறுதியாக அவர் இலங்கையின் சில பிரதிநிதிகளுடன் அமெரிக்கா சென்றிருந்த போது, அவர் அமெரிக்க அதிகாரிகளால் பல மணித்தியாலங்களுக்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அவர் அமெரிக்கா சென்றால், கைது செய்யப்படலாம் அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்பதுடன், அமெரிக்க புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டங்களையும் முகம்கொடுக்க நேரிடும் என்ற அடிப்படையில் அரசாங்கமும், ராஜபக்ஷ குடும்பமும் அச்சம் கொண்டுள்ளன.

0 Responses to கோத்தபாய தனது அமெரிக்க பயணத்தை ஒத்திவைத்தார்