Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னைத் தப்புவிக்கும்படி அமெரிக்காவின் காலைப் பிடித்துக் கெஞ்சும் முயற்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் என்பவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் அமெரிக்காவின் ஆதரவைத் திரட்டும் நோக்கிலேயே அவர் திடுதிப்பென்று அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளதாக அப்பத்திரிகையின் பத்தியொன்று குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிரான செயற்பாடுகளில் .நா.வும் அமெரிக்காவும் கைகோர்த்துக் கொண்டால் நிலைமை கைமீறிப் போய் விடும் என்பதன் காரணமாக அவர் பெரும் அச்சத்துக்குள்ளாகியிருப்பதாக அப்பத்திரிகை சுட்டிக் காட்டுகின்றது.

அதன் காரணமாக அமெரிக்காவின் காலைப் பிடித்து சமாதானப்படுத்தும் நோக்கிலேயே அவர் அமெரிக்காவிற்கான தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அப்பத்திரிகை கிண்டலுடன் குறிப்பிட்டுள்ளது.

ஆயினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பனும், சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்தின் ஆபத்பாந்தவனுமான சீன ஜனாதிபதி அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயம் வெளிப்படாத உள்நோக்கங்களைக் கொண்டதாக இருக்கலாம் என்றும் அவதானிகள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

0 Responses to போர்க்குற்றகளிலிருந்து என்னைக் காப்பாற்றவும்: ஜனாதிபதி மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com