யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலத்தில் நடைபெற்றுள்ள பத்துக் கொலைச்சம்பவங்களும் சர்வ சாதாரண விடயங்கள் என்பதாக பிரதமர் டீ.எம். ஜயரத்தின இன்று பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது கடந்த எட்டு நாட்களுக்குள் யாழ்ப்பாணத்தில் பத்துக்கொலைச் சம்பவங்கள் நடந்தேறியுள்ளமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபையின் கவனத்தை ஈர்த்தார்.
கொலைச்சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளில் யாரும் இதுவரை கைது செய்யப்படாமை கவலைக்குரிய விடயமாகும் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிகளிலும் கூட இவ்வாறான சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றதில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், யாழ்ப்பாணத்தின் முப்பது வீதமான நிலப்பரப்பு அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான கொலைச்சம்பவங்கள் மற்றும் கொள்ளைகள், கற்பழிப்பு முயற்சிகள் நடைபெறுவது எங்கனம் என்றும் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த பிரதமர் டீ.எம். ஜயரத்தின, ஒட்டுமொத்த நாட்டையும் எடுத்துப் பார்க்கும்போது யாழ்ப்பாணத்தில் நடைபெறும் விடயங்கள் சர்வ சாதாரணமானவை என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஆயினும் அதனை அலட்சியப்படுத்தி விட முடியாது என்றும் அரசாங்கம் என்ற வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிழரைக் கொன்று குவித்த சிங்கள இனவாத பயங்கரவாதிகளுக்கு இது வேறும தூசு சாதாரணம் தான்.