Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னையில் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயசூர்யா விளையாடும் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:

வர்த்தக நிறுவனங்கள் இடையேயான 6 வீரர்கள் பங்கேற்கும் சூப்பர் சிக்ஸ் கிரிக்கெட் போட்டி, சென்னையில் தற்போது பிரசிடென்சி கல்லூரியில் நடந்து கொண்டிருக்கிறது.

இறுதிப் போட்டி மாயாஜால் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களான சனத் ஜயசூரிய, அரவிந்த் டீ சில்வா, மொங்கியா, சஞ்சய் பாங்கர், ராபின்சிங், குளுஸ்னர், வினோத் காம்பளி, சுனில் ஜோஷி ஆகியோர் விளையாடுகிறார்கள்.

இதில் இலங்கையின் ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரிய நாளை நடைபெறும் போட்டியில் விளையாட உள்ளார்.

இவர் தமிழர்களுக்கு எதிராக பல்வேறு நச்சுக்கருத்துக்களை ஏற்கனவே வெளியிட்டு உள்ளார். இவர் தமிழ் நாட்டில் கிரிக்கெட் விளையாடுவதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இலங்கைத் தமிழர்கள் முள்வேலி முகாமிற்குள் அடைக்கப்பட்டு உணவின்றி, உடையின்றி, அடிப்படை வசதிகள் எதும் இன்றி நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருக்கின்றனர். என் மீனவனைத் தினமும் இலங்கைக் கடற்படை கொலை செய்து கொண்டிருக்கின்றது.

ஆகவே ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரை கிரிக்கெட் விளையாட என் தாய் மண்ணிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அனுப்பியுள்ளார்.

இது எம் இனத்தை மேலும் கொச்சைப்படுத்துவதாகவும் எம்மை அவமானப் படுத்துவதாகவும் உள்ளது. ஜயசூரிய கிரிக்கெட் விளையாட தமிழக அரசின் விளையாட்டு மைதானம் பயன்படுகிறது.

இதனை நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. ஆகவே தமிழக அரசும் இந்த விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்துள்ள நிறுவனங்களும் உடனடியாக நாளை நடைபெறும் போட்டி உட்பட ஜயசூரிய பங்கேற்கும் அனைத்து போட்டியையும் ரத்து செய்ய வேண்டும்.

இதனையும் மீறி விளையாட்டை நடத்த முற்பட்டால் கிரிக்கெட் மைதானத்தையும், விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்துள்ள நிறுவனங்களின் அலுவலகங்களையும் நாம் தமிழர் கட்சி முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழ் நாட்டில் ஜயசூரிய விளையாடினால் மைதானத்தை முற்றுகையிடுவோம்: சீமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com