Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரபலமானவரும் அழகான தோற்றம் கொண்டவருமான சிங்கள நடிகையொருவருக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கார் ஒன்றை அன்பளிப்புச் செய்துள்ளதாக பாதுகாப்பமைச்சின் தகவல் வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சிங்களத் திரைப்பட நடிகையான சபீதா பெரேராவே அவராவார். அவரது தனிப்பட்ட பயணங்களுக்காகவே பாதுகாப்பமைச்சின் அதிநவீன சொகுசு காரொன்று பாதுகாப்புச் செயலாளரால் வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளை நிறத்திலான குறித்த மொ்சிடீஸ் பென்ஸ் ரக வண்டியானது அமைச்சர்களின் பாவனையில் இருக்கும் சொகுசு கார்களை விட விலை அதிகமானதும், வசதிகள் கூடியதுமான அதிநவீன சொகுசு வண்டியாகும் என்று அறியப்படுகின்றது.

ஆங்கில எழுத்துக்களை முதல் எழுத்துக்களாகக் கொண்ட 5565 இலக்க பென்ஸ் வண்டியானது தற்போது சபீதா பெரேராவின் தனிப்பட்ட பாவனைக்காக எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் குறித்த தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

அரசாங்க அதிகாரி அல்லாத ஒருவருக்கு அரசாங்கத்துக்குச் சொந்தமான பொருளொன்றை தனிப்பட்ட பாவனைக்கு வழங்குவதென்பது அரச சொத்துக்கள் துஷ்பிரயோகத்தின் உச்ச கட்டம் என்ற போதிலும் பாதுகாப்புச் செயலாளர் அதனை துச்சமாக மதித்து நடந்துள்ளார்.

0 Responses to கோத்தபாய நடிகையொருவருக்கு கார் அன்பளிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com