Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொங்கல் வைபவங்களின் போது ஜனாதிபதியின் தலைப்பாகையானது பொங்கல் பானைக்குள் விழுந்தமையானது துர்அறிகுறியொன்றாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

கடந்த 17ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி கைப்பிடி அரிசியை பொங்கல் பானைக்குள் போடுவதற்காகக் குனிந்தபோது அவரது தலைப்பாகை கழன்று பொங்கல் பானைக்குள் விழுந்துள்ளது.

சம்பிரதாயப்படி பொங்கல் பானைக்குள் கைப்பிடி அரிசியைப் போடும்போது தலையில் இருக்கும் தலைப்பாகை நழுவி விழுவதானது கெட்ட சகுனத்தின் அறிகுறியொன்றாகவே கருதப்படுகின்றது.

அந்த வகையில் ஜனாதிபதியின் யாழ்ப்பாண சம்பவம் கூட அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் கெட்ட சகுனம் ஆரம்பிப்பதற்கான அறிகுறியா என்று விடயமறிந்தவர்கள் பேசிக் கொள்ளத் தொடங்கியுள்ளார்கள்.

0 Responses to யாழில் பொங்கல் பானைக்குள் விழுந்த மஹிந்தரின் தலைப்பாகை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com