மஹிந்த ராஜபக்ஷவின் உருவம் பொறித்த கலண்டருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனைத் தீக்கிரையாக்கிய இருநூறு பேரை தமிழகப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
இந்திய இராணுவத்தின் பயிற்சி மையம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ள 2011ம் வருடத்துக்கான கலண்டரில் உலகத் தலைவர்களின் புகைப்படங்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று தமிழ்நாட்டில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது குறித்த கலண்டரின் பிரதிகளுக்கும் தீவைத்து எரிக்கப்பட்டது.
ம.தி.மு.க மற்றும் நாம் தமிழர் அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவானோர் பங்கு கொண்டிருந்ததுடன், குறித்த கலண்டரை வாபஸ் பெறுமாறு அவர்கள் வலியுறுத்தினர்.
அதன் போது கலண்டரை தீக்கிரையாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிசார் இருநூறு பேரைக் கைது செய்துள்ளனர்.

0 Responses to மஹிந்தவின் உருவம் பொறித்த கலண்டர் தீக்கிரை