Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரபல கவிஞரும் எழுத்தாளருமான லீனா மணிமேகலை இயக்கியிருக்கும் படம் செங்கடல். திடீர் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறது இப்படம். காரணம் சென்சார் அமைப்பு.

செங்கடல் படத்தை வெளியிட தடை விதித்திருக்கிறது சென்சார். இதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்ல முடிவெடுத்திருக்கிறார் லீனா மணிமேகலை. அண்மையில் ஈழ மண்ணில் நடந்த கொடூரமான போர் காலங்களில் அங்கிருந்து இங்கு தப்பி வந்த அகதிகளை பற்றியும், ஈழ பிரச்சனையில் இங்குள்ளவர்களின் அணுகுமுறை பற்றியும் பேசுவதுதான் இந்த படம். இங்கு வரும் அகதிகளை பேட்டியெடுக்க செல்லும் பத்திரிகையாளராக இதில் நடித்திருக்கிறார் லீனா மணிமேலை. பிரபல எழுத்தாளரும், ஈழ மண்ணை சேர்ந்தவருமான ஷோபா சக்தியும் இப்படத்தில் மிக முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடித்திருக்கிறார்.

ராமேஸ்வரம் பகுதியில் கரையதுங்கும் பிணங்களையும், நடுத்திட்டில் இறக்கிவிடப்படும் அகதிகளையும் காட்டி மனதில் எரிமலையை மூட்டுகிறார்களாம் இப்படத்தில். சிங்கள அரசையும் இந்திய அரசையும் விமர்சிக்கும் வசனங்களை நீக்க சொன்ன சென்சார் அமைப்பை எதிர்த்துதான் நீதிமன்றத்திற்கு செல்லப் போகிறார் லீனா.

செங்கடல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான படம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. பத்திரிகையாளர்களுக்கு இன்று இப்படம் திரையிடப்படுகிறது. பார்க்கலாம்... என்ன சொல்லப் போகிறார் லீனா என்று!

0 Responses to ஈழத்தமிழர் நிலை குறித்த 'செங்கடல்' படத்திற்கு தடை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com