தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்விவகாரத்தில் தான் தலையிடமாட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நோர்வே அரசிடம் உறுதியளித்தார். இவ்வாறு விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது என இணையத்தளம் தெரிவித்துள்ளது.
விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பிரச்சினைகளில் தான் தலையிடமாட்டேன் என்று அன்று பிரதமராக இருந்த ரணில், நோர்வேயின் இலங்கைக்கான சமாதானத் தூதுவராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்மிடம் உறுதியளித்துள்ளார் என்றும் அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரிலொண்ஸ்டட் மற்றும் எரிக்சொல்ஹெய்ம் ஆகிய இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்ட சு.ப.தமிழ்செல்வனை புலிகளின் வன்னி மாவட்டத் தலைமையகத்தில் வைத்து சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to விடுதலைப் புலிகளின் உள்விவகாரத்தில் தலையிடேன்: நோர்வேயிடம் ரணில்: விக்கிலீக்ஸ்