போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு விழப்போகும் அடுத்த சாட்டையடி: மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை?இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடுத்த நெருக்கடி எதிர்வரும் மார்ச் மாதம் பெரும் சாட்டையடியாக மாறவுள்ளதாக ஊர்ஜிதமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வின் போது இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்றை முன்மொழிவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கென ஆதரவு திரட்டும் நோக்கில் ஐரோப்பாவின் பலம் பொருந்திய சிலநாடுகளின் உயர்மட்ட அமைச்சர்களுடனான கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அதற்கு மேலதிகமாக ஐ.நா. நிபுணர் குழுவின் ஊடாக இலங்கையின் போர்க்குற்ற ஆதாரங்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிரானதும், பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சாதகமானதுமான அறிக்கையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளும் இராஜதந்திர ரீதியில் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிய வருகின்றது.



0 Responses to போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு விழப்போகும் அடுத்த சாட்டையடி