Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

துணைப்படை .பி.டி.பி குழுவின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை மகிந்த ராஜபக்ச கடுமையாகத் திட்டியதாக இன்றைய சண்டே லீடர் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் கடந்த திங்கட்கிழமை 3ஆம் நாள் அலரி மாளிகையில் நடைபெற்றபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ் குடாநாட்டில் இடம்பெறும் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்றில் பேச டக்ளஸ் அனுமதி கோரியபோது, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் என்ற வகையில் டக்ளஸ் அதனைச் செய்ய முடியும் என மகிந்த கூறியிருக்கின்றார்.

இதனையடுத்து அவ்வாறு தான் பேசும்போது அரச தரப்பில் யார் பதிலளிக்க உள்ளனர் என டக்ளஸ் மகிந்தவிடம் திருப்பி கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

உடனடியாக சூடான மகிந்த, ;நீர் என்ன என்னை வந்து பதிலளிக்க சொல்லச் சொல்லியா சொல்லுகின்றீர்? இதற்கென நான் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்றா நீர் கேட்கின்றீர்? எனக் கோபமாகக் கத்தியிருக்கின்றார்.

மகிந்தவின் கோபத்தைக் கண்டு அஞ்சிப்போன டக்ளஸ் தேவானந்தா திருப்பி எதுவும் பேசாது அமைதியாக இருந்திருக்கின்றார்.

அத்துடன் விட்டுவிடாத மகிந்த, யாழ் குடாநாட்டில் கொலைகளிலும், கடத்தல்களிலும் ஈடுபடுபவர்களிடம் போய் கேளும் என, மீண்டும் கத்தியிருக்கின்றார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் டக்ளஸ் தேவானந்தா அவமானப்பட்ட போதிலும், அதனைச் சமாளிக்க மிகவும் சிரமப்பட்டிருக்கின்றார்.

இதேபோன்று கடந்த பல மாதங்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் மகிந்தவின் சகோதரரும், அமைச்சருமான பசில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், டக்ளஸ் தேவானந்தா பேச முற்பட்டபோது வாயில் விரலை வைத்துமூடிக்கொண்டிரும்என்பது போன்று பசில் சைகை செய்தபோது டக்ளஸ் மிகுந்த அவமானத்திற்கு உள்ளானதை பதிவின் யாழ் செய்தியாளர் நினைவூட்டினார்.

முன்னர் விடுதலைப் புலிகளைச் சொல்லி பிழைப்பு நடத்திய துணைப்படைக் குழுக்களின் தலைவர்கள், தற்பொழுது அடங்கி ஒடுங்கி அடிமை வாழ்வு வாழ்ந்து வருவதாக, கொழும்பின் ஊடகவியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

2 Responses to டக்ளசைத் திட்டிய மகிந்த, அமைதியாக இருந்த டக்ளஸ்: சண்டே லீடர்

  1. வாங்கியது செருப்படி இனியாவது திருந்துமா இந்த ஜன்மம், இனியாவது புரிந்து கொள்ளுமா இனவாத கொலைவெறியரை? காட்டிக் கொடுத்து கூட்டிக் கொடுத்து பதவிகளுக்கா வாழும் அடிமை வாழ்வு அவமான வாழ்வு.

     
  2. ethu vanum

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com