Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரச கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கின்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவு முகவர் கே.பி உடனடியாக இந்தியாவிடம் கையளிக்குமாறு கூறியுள்ளார் பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் மீது சுமத்துவதை விடுத்து அரசாங்கம் முதலில் கே.பி இந்தியாவிடம் கையளிக்க வேண்டும் என்கிறார் அவர்.

நேற்று முன் தினம் நீர்கொழும்பில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே ரணில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

கே.பி மீதான பல குற்றச்சாட்டுகளைக் கண்டும் காணாதது போல இருந்து கொண்டு தம்மீது மட்டும் அரசாங்கம் குற்றம் சுமத்துவதாகக் கூறியுள்ள ரணில், எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தேவையில்லாமல் துரோகிகள் எனப் பட்டம் குத்தும் அரசாங்கம் கே.பி க்கு மட்டும் அதிகபட்ச பாதுகாப்பையும் வசதிகளையும் செய்து வருகிறது எனவும் குறிப்பிட்டார்.

கே.பி இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்பட்டார், அவற்றுக்கெல்லாம் அவர் நிச்சயம் பதில் கூறியே ஆகவேண்டும் என்று கூறும் ரணில், தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கசப்புணர்வு மற்றும் பொருளாதார ரீதியில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமை மற்றும் வாழ்க்கைச் செலவைக் குறைக்க நடவடிக்கை எடுக்க முடியாமல் அரசின் திண்டாட்டம் ஆகியவை வரப்போகும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஆளும் கட்சிக்குத் தோல்வியைச் சம்பாதித்துக் கொடுக்கும் எனவும் சொல்லியுள்ளார்.

0 Responses to உடனடியாக கே.பி ஐ இந்தியாவிடம் கையளியுங்கள்: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com