Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கையும் மெய்யுமாகப் பிடிபட்ட கள்வனைப் பொலிசாரிடம் ஒப்படைக்க அவரைக் கொலைசெய்துள்ளது இலங்கைப் பொலிசார். வெளியான காணொளியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 9ம் திகதி வரக்காப்பொல அங்குருவெல்ல பிரதேசத்தில் நகை அடகுபிடிக்கும் நிலையம் ஒன்றில் கொள்ளையிடச் சென்ற 7 கொள்ளையர்கள், இரண்டு காவற்துறையினரை சுட்டுக்கொன்றனர். காவல்துறையினர் 2 வர் இறந்தபின்னர் கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் காட்டிற்குள் தப்பியோடியுள்ளனர். ஒருவரை கிராமவாசிகள் மடக்கிப் பிடித்து கைகளைக் கட்டி நையப்புடைந்தனர். பின்னர் அவரைப் பொலிசாரிடம் உயிரோடு ஒப்படைத்தனர். ஆனால் பொலிசாரோ தாம் காட்டிற்கு அவர்களைத் தேடிப்போகும் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 7 பேரும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்து வழக்கை மூடிவிட்டனர்.

அதில் ஒருவரை பொதுமக்கள் உயிரோடு பொலிசாரிடம் ஒப்படைத்த காட்சிகளை ஒருவர் கையடக்க தொலைபேசியில் பதிவுசெய்துள்ளார். இக் கொலைச் சம்பவத்தோடு தொடர்புடைய வீடியோ வெளியாகியுள்ளதால், இலங்கைப் பொலிசார் தொடர்பாக மற்றுமொரு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. உயிரோடு கொண்டுசென்ற கொள்ளையரில் ஒருவரை பொலிசார் பின்னர் சுட்டுக்கொண்றுள்ளனர். ஆனால் இந்த வீடியோ வெளியே வரும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இதனால் தற்போது பெரும் நெருக்கடியில் இலங்கைப் பொலிசார் சிக்கியுள்ளதாக அறியப்படுகிறது.

சிங்களப் பொலிசாரும் இராணுவத்தினரும் சேர்ந்து சிங்களவரையே இப்படிப் படுகொலைசெய்தால், தமிழர்களை எவ்வாறு நடத்துவார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமையும் என்பதில் ஜயமில்லை என்கிறார் அதிர்வின் கொழும்பு நிருபர். சிங்களவர்களுக்கே இந்த நிலையென்றால் தமிழர்களுக்கு யோசித்துப்பாருங்கள்.


இச் செய்தி அதிர்விலிருந்து...

0 Responses to இலங்கைப் பொலிசாரின் கொலைவெறி: அதிர்ச்சிக் காணொளி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com