இலங்கையின் ஆறு முக்கிய ஊடக அமைப்புகள் மேற்கொண்ட சுயாதீன ஆய்வின் போது இறுதிக்கட்ட யுத்தத்தில் எண்பதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக ஆதாரபூர்வமான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதற்கு மேலதிகமாக யுத்தத்தின் காரணமாக இருபத்தியேழாயிரம் பிள்ளைகள் தமது பெற்றோர் இருவரையும் இழந்து வாழ்வதாகவும் புள்ளி விபரங்கள் வெளிவந்துள்ளன.
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியடையவுள்ள தருணத்தில் வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் அங்கு நிலவும் இயல்பு வாழ்க்கைச் சூழல் என்பன குறித்து ஆராய்வதற்காக இலங்கையின் ஆறு ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
அதன்போது அவர்கள் பிரதேசத்தின் புத்திஜீவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட சுயாதீனத் தரப்பு தகவல்களின் மூலம் பெற்றுக் கொண்ட தகவல்களை ஒரு அறிக்கையாகத் தயாரித்துள்ளார்கள். அந்த அறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தென்னாசிய சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியம்(சப்மா), இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடக நிறுவனங்களின் ஊழியர்கள் அமைப்பு, ஒன்றிணைந்த ஊடகவியலாளர் ஒன்றியம் என்பனவே வடக்கிற்கான சுற்றுலாவையும், தகவல் தேடலையும் மேற்கொண்டிருந்தன.
அதன் போது அவர்கள் திரட்டிய தகவல்களின் சாராம்சம் வருமாறு:
அரசாங்கம் தற்போதைக்கு நான்காயிரம் அளவிலான விடுதலைப் புலி உறுப்பினர்களே புனர்வாழ்வளிப்பதற்காகத் தம்மால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறினாலும், உண்மையில் அதன் எண்ணிக்கை பதினையாயிரம் அளவில் இருக்கும் என்று அங்குள்ள பொதுமக்கள் ஆதாரபூர்வமான விபரங்களுடன் வலியுறுத்தியுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளியுலகத்துடன் தொடர்பற்ற முகாம்களில் இரகசியமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பமாவதற்கு சற்று முன்பான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் வன்னியில் மூன்று இலட்சத்து இருபதினாயிரம் பொதுமக்கள் வாழ்ந்தார்கள். அந்த எண்ணிக்கையில் விடுதலைப் புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளடக்கப்படவில்லை.
அதன் பின் யுத்த வலயத்திலிருந்து வெளியேறி வந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என இரண்டு இலட்சத்து எழுபதினாயிரம் போ் மட்டுமே அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு இலட்சம் போ் மெனிக் பார்ம் முகாமுக்கும், எண்பதினாயிரம் போ் முல்லைத்தீவுக்கும், முப்பதினாயிரம் போ் வேறிடங்களிலும் தங்க வைக்கப்பட்டார்கள். இன்னும் ஒரு முப்பதினாயிரம் மக்கள் நாட்டை விட்டுத் தப்பியோடியும், அதில் ஒருசிலர் இலங்கையின் வேறு பாகங்களுக்கு இடம் பெயர்ந்தும் வசித்து வருகின்றனர்.
அந்த வகையில் சுமார் எண்பதினாயிரம் அளவிலான பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு என்ன நடந்ததென்பது யாருக்கும் தெரியவில்லை. பெரும்பாலும் அவர்கள் போரின் போது கொன்றொழிக்கப்பட்டிருக்கலாம்.
அரசாங்கம் தற்போதைய நிலையில் அனைத்துப் பிரதேச செயலக மட்டங்களிலும் தலா ஆயிரம் ஏக்கர் வரையான பொதுமக்களின் காணிகளைப் பலவந்தமாக சுவீகரித்துள்ளது. தொடர்ந்தும் சுவீகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது.
இராணுவத்தினரும் தம் பங்குக்கு புதிய புதிய இடங்களில் எல்லாம் முகாம்களை அமைக்கின்றார்கள். காணி உரிமையாளர்கள் அது பற்றி வினவினால் இது விடுதலைப் புலிகள் வைத்திருந்த காணி, அதனால் நாங்கள் முகாம் அமைக்கின்றோம் என்று பதிலளிக்கின்றார்கள்.
காணி உரிமையாளர்கள் அவ்வாறான நடவடிக்கைகளால் நடு வீதிக்கு இறக்கப்பட்டுள்ளார்கள். விடுதலைப் புலிகளிடமிருந்து எங்களை மீட்பதற்காக வந்தவர்கள் என்று கூறிக் கொள்கின்றவர்கள் விடுதலைப் புலிகள் செய்த அதே தவறை செய்யலாமா?
வடக்கிற்கான பிரதான பாதையான ஏ-09 வீதி குன்றும் குழியுமாக போக்குவரத்துக்கு கொஞ்சமும் இலாயக்கற்ற நிலையில் காணப்படுகின்றது. அதில் பயணிப்பவர்கள் கடல் கொந்தளிப்புக்குள் அகப்பட்ட படகில் பயணிப்பதைப் போன்ற உணர்வைத் தான் அனுபவிப்பார்கள்.
அத்துடன் ஏ-09 வீதியின் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் குறைந்த பட்சம் இரண்டு வீதம் இராணுவக் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடமாடும் இராணுவ அணிகளும் ஆங்காங்கே எதிர்ப்படுகின்றன.
அதற்கு மேலாக ஏ-09 வீதியின் இருமருங்கிலும் பன்னாட்டு நிறுவனங்களின் பாரிய விளம்பரப் பதாதைகள் குறுகிய இடைவெளிக்குள் நிறுவப்பட்டுக் காணப்படுகின்றன. அவற்றினால் நடந்த அபிவிருத்தித் திட்டங்களை மட்டும் காணமுடியவில்லை.
உதுரு மிதுரு செயற்திட்டத்தின் கீழ் ஓமந்தை தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான இரயில் பாதையைப் புனரமைக்க அரசாங்கம் தென் பகுதி மக்களிடம் நிதி சேகரித்திருந்தது. ஆயினும் அதற்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை.
அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கின் மண், மரம், கல் என்பவற்றையெல்லாம் அரசாங்கம் கொள்ளையடித்துக் கொண்டு தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்கின்றது. அதனை எதிர்ப்பவர்கள் வெள்ளை வானில் கடத்தப்படுகின்றார்கள். ஒருசிலர் படுகொலை செய்யப்படுகின்றார்கள்.
யாழ்ப்பாணத்தில் பத்தடிக்கு ஒரு இராணுவ சிப்பாய் என்ற அளவில் ஐம்பதினாயிரம் இராணுவம் மற்றும் பொலிசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை மீறி அங்கு ஒரு சாண் நிலத்தில் கூட எதுவும் நடக்க முடியாது.
ஆயினும் இதுவரை யாழ்ப்பாணத்தில் நடந்த எந்தவொரு கொலையினதும் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அரசாங்கத்துக்கு ஆதரவானவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் என்பதால் தான் அரசாங்கம் அதனைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
யாழ்ப்பாணம் இன்றைய நிலையில் இன்னொரு புறத்தில் சீனா மற்றும் இந்தியா போன்ற வல்லாதிக்க சக்திகளின் வர்த்தக மையமாக மாறி வருகின்றது. அவரவர் வந்து தத்தமக்கு பிடித்தமான இடத்தில் பிடித்தமான தொழில்துறையை ஆரம்பிக்கின்றார்கள். அதன் மூலம் பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைத்ததில்லை.
இவ்வாறான நிகழ்வுகளின் மூலம் யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஜனநாயகம் துளிர்த்து விடக் கூடாது என்பதில் அரசாங்கம் வெகு அவதானமாகச் செயற்படுவது புலனாகின்றது. அதன் காரணமாக இங்குள்ள ஊடகங்களும் உண்மைகளை வெளிக்கொண்டு வர முடியாதளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றிற்கான அச்சுறுத்தல்களும் பலமாக உள்ளன என்றும் அந்த அறிக்கையில் விலாவரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to இறுதி யுத்தத்தில் எண்பதாயிரம் மக்கள் படுகொலை: திடுக்கிடும் தகவல்