சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள நிபுணர் குழுவை சிறீலங்கா அதிகாரிகள் நியூயோர்க்கில் வைத்து இரகசியமாக சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கடந்த மாதத்தின் இறுதிப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்த சிறீலங்கா அரசின் நான்கு முக்கிய பிரதிநிதிகள், அதன் பின்னர் ஐ.நா.வின் நிபுணர் குழு பிரதிநிதிகளையும் இரகசியமாக சந்தித்துள்ளனர்.
சிறீலங்கா அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் இந்த தகவல்களை மறைத்துள்ளபோதும், கொழும்பு ஊடகம் ஒன்று அதனை அம்பலப்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் நாள் ஐ.நா தலைமையகத்தில் உள்ள மூன்றாவது மாடியில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
சிறீலங்கா குழுவில் சிறீலங்காவின் நீதி ஆணையாளர் நாயகம் மொஹான் பீரீஸ், வெளிவிவகார அமைச்சகத்தின் செயலாளர் ரொமேஸ் ஜெயசிங்க, ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதி பாலித கோஹன்ன, ஐ.நாவுக்கான பிரதி பிரதிநிதியும், பிரதம போர்க்குற்றவாளிகளில் ஒருவருமான முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா ஆகியோர் அடங்கியிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது, சிறீலங்கா அரசு அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டதுடன், அதற்கு மேலும் கால அவகாசம் தேவை எனவும் சிறீலங்கா தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் பான் கீ மூனின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரும் உடன் இருந்துள்ளார்.
இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை (04) சமர்ப்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பிரதி ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்திலும் சமர்ப்பிக்கப்படவிருந்தது.
ஆனால் ஐ.நா அதனை திடீரென மூன்று வாரங்கள் பிற்போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த காலதாமதத்திற்கான காரணத்தையும் அது தெரிவிக்கவில்லை.
இந்த கால அவசாகம் வழங்கப்பட்டது தொடர்பில் சிறீலங்கா அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to ஐ.நா. சபையின் நிபுணர் குழுவை இரகசியமாக சந்தித்த சிறீலங்கா அதிகாரிகள்