Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவுற்றுள்ள போதிலும் நாட்டில் எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடும் தளர்த்தப்பட மாட்டாது என்று பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

யுத்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தளர்த்தவோ, பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்கவோ தான் ஒருபோதும் தயாரில்லை என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஆனால் நாங்கள் அதற்குத் தயார் இல்லை.

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் உதவியின் இந்நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகள் காலூன்ற முற்படுகின்றார்கள். அதனை முறியடிப்பதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்படக் கூடாது. அத்துடன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to புலிகளுடனான யுத்தம் நிறைவுற்றாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது: கோத்தா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com