Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களையும், போர்க்குற்றங்களையும் உலகம் மறந்துவிடவில்லை என்பதைத் தான் அண்மையில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா நாடுகள் வெளியிட்ட அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக வொசிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அதன் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பிராட் அடம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான அனைத்துலகத்தின் அழுத்தங்கள் அதிகரித்து வருவதையே அமெரிக்காவின் செனட் சபை மேற்கொண்ட தீர்மானம் எடுத்துக்காட்டுகின்றது.

கடந்த 1 ஆம் நாள் செனட் சபையின் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றபபட்டிருந்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து அதனை பின்பற்ற அவுஸ்திரேலியாவும், பிரித்தானியாவும் முயன்று வருகின்றன.

சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மீது சுயாதீன அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் அமைக்கப்பட்டுள்ள ஆலோசனைக்குழு அதன் இறுதி அறிக்கையில் தெரிவிக்கும் என நாம் நம்புகிறோம்.

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களையும், போர்க்குற்றங்களையும் உலகம் மறந்துவிடவில்லை என்பதைத் தான் அண்மையில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா நாடுகள் வெளியிட்ட அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to சிறீலங்காவின் போர்க்குற்றங்களை உலகம் மறந்துவிடவில்லை: மனித உரிமைகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com