இந்த மாதத்தின் முற்பகுதியில் சிறீலங்காவின் தலைநகருக்கு அண்மையாக அழிவைச் சந்தித்த இரு கிபீர் விமானங்களின் அழிவு தொடர்பான விசாரணைகளில் சிறீலங்கா அரசு அதிக தீவிரம் காண்பித்து வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
சிறீலங்கா அரசு அமைத்துள்ள சிறீலங்கா வான்படையின் ஐந்து உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு, விமானங்களின் எல்லா பாகங்களையும் கட்டுநாயக்கா வான்படைத்தளத்திற்கு கொண்டு சென்று குவித்துள்ளதுடன், அதனை மீள ஒழுங்குபடுத்தி காரணத்தை அறியும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
விபத்து நடைபெற்ற இடத்திற்கு விசாரணைக்குழுவின் தலைவர் ஏயர் வைஸ் மார்சல் கபிலா ஜெயம்பதி பயணம் மேற்கொண்டதுடன், விமானங்களுக்கான தகவல்களை வழங்கிய கட்டுப்பாட்டு அறையின் பணியாளர்களையும் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளார்.
எதிர்வரும் இரு வாரங்களில் இந்த விபத்து தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கபடவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Responses to கிபிர் விமானங்களின் விபத்து குறித்த விசாரணைகளில் சிறீலங்கா தீவிரம்