Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அனைவருக்கும் அன்புடனும், மன நெகிழ்வுடனும் எமது குடும்ப சார்பான நன்றிகளை இத்தால் தெரிவிக்கிறோம்.

எமது தாயார் அமரர் பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்களுடைய இறுதிக்கிரியைகளில் பங்கேற்ற அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறோம். தாயகத்திலும், வெளி நாடுகளிலும் எமது தாயாரை தமது அன்னை போல போற்றி அஞ்சலி நிகழ்வுகளைச் செய்து, துண்டுப்பிரசுரங்களை வெளியீடு செய்து, இணையம் மூலமாக அது குறித்த தொடர் செய்திகளை வெளியிட்டு அனைத்து வழிகளிலும் பங்கேற்ற அத்தனை உடன் பிறப்புக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். வீட்டில் நடைபெற்ற கிரியைகள், அஞ்சலி நிகழ்வுகள், ஒழுங்கமைப்பு செய்தவர்கள், வைத்தியசாலைப் பகுதியினர், பங்கேற்ற தலைவர்கள், பொதுமக்கள், வெளிநாடுகளில் விசேட அஞ்சலிகளை செலுத்தியோர், இதற்காக விசேட நிகழ்ச்சிகளை வெளியிட்ட ஊடகங்கள், தொலைபேசி வழியாக துயர் பகிர்ந்தோர், கவிதைகளை, கட்டுரைகளை எழுதிய படைப்பாளிகள் உட்பட அனைவருக்கும் அன்புடனும், மன நெகிழ்வுடனும் எமது குடும்ப சார்பான நன்றிகளை இத்தால் தெரிவிக்கிறோம்.

அமரர் பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்களின் குடும்பத்தினர் சார்பாக

மகன். வேலுப்பிள்ளை மனோகரன் டென்மார்க். 02.03.2011

0 Responses to அமரர் பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்களின் இறுதிக்கிரியைகளுக்கான நன்றி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com