Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

.நா நிபுணர் குழு புலம்பெயர் தமிழர்களிடம் கோடிக் கணக்கில் பணம் பெற்றே இலங்கைக்கு எதிரான அறிக்கையை தயார் செய்துள்ளதென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நிபுணர் குழுவின் தர்சுமன் உள்ளிட்ட மூவருக்கு புலம்பெயர் தமிழர்கள் கோடிக் கணக்கில் பணம் வழங்கியுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதென விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு புது வருட பரிசு ஒன்று வழங்கியதாகவும், பான் கீ மூனின் மூன்று நாட்டாமைமார்கள் தயாரித்த அறிக்கையே அது எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ போன்ற தலைவர்களை கொலை செய்த வேலுப்பிள்ளை பிரபாகரன் பாரிய யுத்தக் குற்றவாளி எனவும் பிரபாகரனை ஒழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தக் குற்றவாளி இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஐ.நா நிபுணர் குழு புலம்பெயர் தமிழர்களிடம் லஞ்சம் பெற்றுள்ளது: விமல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com