Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கிளிநொச்சியில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் வெளியேறியமை தொடர்பில், இன்னர் சிற்றி பிரஸ் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

சனல் 4 காணொளி தொடர்பில், ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி பிரதிநதி சவேந்திர சில்வா நேற்று முன்தினம் விளக்கமளித்திருந்தார்.

இந்த காணொளிகள் போலியாக தயாரிக்கப்பட்டதாகவும், யுத்தம் இடம்பெற்றக் காலப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் யுத்தப் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் நேர்மையற்றதாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்தது.

இதன் காரணமாகவே யுத்த பிரதேசத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்களையும், ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களையும் வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டதாக சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அரசாங்கத்தின் உத்தரவின் அடிப்படையிலா அல்லது, நடைபெற்ற சம்பவங்கள் நேர்மை அற்றவை என்று கருதியா? யுத்த பிரதேசங்களில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் விலகினார்கள் என்று இன்னர் சிற்றி பிரஸ் நேற்று கேள்வி எழுப்பியது.

அத்துடன் அங்கு நடைபெற்ற நேர்மையற்ற சம்பவங்கள் என்ன எனவும் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது.

எனினும் இதற்கான பதிலை தாம் அறிந்திருக்கவில்லை என தெரிவித்த சபையின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்ஸ்கி இது தொடர்பில் தாம் அவதானம் செலுத்துவதாக குறிப்பிட்டார்.

ஏற்கனவே கிளிநொச்சியின் ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகள் குறித்து ஆராயவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் அறிவித்திருந்தார்.

இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகின்ற நிலையிலும், இதுவரையில் ஐக்கிய நாடுகள் சபையால் எந்தவிதமான முன்னெடுப்புகளும் இடம்பெறவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to கிளிநொச்சியிலிருந்து ஐ.நா வெளியேறியமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com