Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான சனல் 4 இன் ஆவணப்படத்தை அமெரிக்காவின் செனட்சபை உறுப்பினர் கள் நேற்றுப் பார்த்தனர்.மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, நெருக்கடிகளுக்கான சர்வதேசக் குழு மற்றும் பகிரங்க சமூக மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும் செனட்சபை உறுப்பினர்களுடன் இணைந்து இந்த ஆவணப் படத்தைப் பார்த்தனர்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கேட்போர் கூடத்தில் இப்படம் திரையிடப்பட்டது.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைத் தலைவரும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினருமான ஜிம் மெக்கோவான் அறிமுக உரையை வழங்கி ஆவணப்படத்தை ஆரம்பித்து வைத்தார்.படத்தைப் பார்த்து முடித்ததும் ஐ.நா.நிபுணர்கள் குழுவின் அறிக்கை உள்ளிட்ட இலங்கையின் பொறுப்புடமை தொடர்பாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டது.

0 Responses to அமெரிக்க செனட்டர்கள் நேற்று சனல் -4 வீடியோ பார்த்தனர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com