Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சேர். பொன். இராமநாதன் போல தலைப்பா கட்டுக்கு ஏமாராது ஜின்னாபோல சிந்திக்க வேண்டிய நேரம் இது..

அரசியல் என்பது சதுரங்க விளையாட்டு போன்றது. ஒரு நிமிடத்துளியை தவற விட்டால் அது ஒரு நூற்றாண்டு வரலாற்றையே தவறான பாதைக்குள் தள்ளிவிடும்..

சிங்கள இனவாத அரசை நம்பிப் போவதும், பின் அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று வருவதுமாக தமிழ் தலைவர்கள் தமது நெடிய வரலாற்றை எழுதி முடித்துவிட்டார்கள்..

இப்போது..

கோட்டைவிடப்பட்ட நிமிடத்துளிகளே தமிழர் அரசியல் வரலாறாகிவிட்டது..

இனி ..

இன்னொரு வாய்ப்பு அவர்களுடைய கதவைத் தட்டுகிறது.. அதையாவது சரியாகப் பயன்படுத்துவார்களா.. இல்லை மறுபடியும் முதலாவது படிக்கட்டில் ஏறப்போகிறார்களா என்பதுதான் இப்போது நம்முன் உள்ள கேள்வி..

இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு பாராளுமன்ற தேர்வுக்குழு.. இதுதான் இப்போது ஆரம்பித்துள்ள புதிய கூத்தாட்டம்.

சிறீலங்கா அரசுகள் தம்முடைய வரலாற்றில் இதுவரை அமைத்த தேர்வுக்குழுக்கள் பல..பலப்பல.. அத்தனையும் கண்துடைப்பு .. ஏமாற்று… உருப்படியான முடிவைத் தந்த தேர்வுக்குழு ஒன்றை அடையாளம் காட்ட முடியுமா..?

எதுவுமே கிடையாது..!

இத்தனை பேரழிவுகள், போர்க்குற்றம், காட்டுமிராண்டிப் போர் போன்றவற்றை நடாத்திவிட்டு, இனியும் ஒரு தேர்வுக்குழுவா..?

இக்கேள்விக்கு நல்லதோர் பதிலைத்தந்துள்ளது பழைய தேர்வுக்குழு மோசடி மன்னரான ஐ.தே.க.

கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டால் நாமும் தேர்வுக்குழுவில் இடம் பெறுவோம் என்று கூறியுள்ளது..

அவர்களின் வக்கிரமான பதிலுக்குள் மறைந்திருக்கும் பரிசோதனை என்ன..?

இப்படியான மோசமான ஏமாற்றுக்கு பலியாகக்கூடிய இனம் உலகில் எங்காவது இருக்குமா.. இப்படியொரு தேர்வுக்குழுவை ஏற்று உலகில் எந்த மூடனும் தன்னை மூடன் என்று பறைசாற்ற முன்வருவானா.. ஐ.தே.க ஆழம் பார்த்துள்ளது.

ஏற்கெனவே தேர்வுக்குழு அமைக்கப்பட்டால் மக்களை ஒன்றாக்கி போராட்டத்தில் குதிப்போம் என்று கூட்டமைப்பின் ஒரு சில தலைவர்கள் கூறியுள்ளார்கள். அதேவேளை அதற்குள்ளும் சுத்துமாத்து பண்ண வேறு சிலர் முயற்சிப்பதும் அருவமாகத் தெரிகிறது.

இப்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சி உலகின் அரசியல் அதிகாரத்தை மாற்றி வருகிறது..

மக்கள் சத்தியைத்தவிர சர்வாதிகாரத்தை விடுவிக்க தற்போதைக்கு வேறு வழி எதுவும் கிடையாது.

மத்திய கிழக்கில் உள்ளது போன்ற தூய ஜனநாயக அணியை மக்கள் மன்றில் இருந்து அமைத்து, ஜனநாயக வழியில் போராட தேர்வுக்குழு ஏமாற்று போதுமான படிக்கட்டு..

நீங்கள் உங்களுடைய நலனுக்கு எதைச் செய்தாலும் நாம் தடுக்கப்போவதில்லை.. அதுபோல நாங்கள் செய்வதையும் நீங்கள் தடுக்காதீர்கள் என்று ஜி.எல். பீரிஸ் இந்தியா, சீனா, பாகிஸ்தான் முன் வைத்துள்ள டயலொக் மிக ஆபத்தான டயலொக்.

தமிழர் கூட்மைப்பு இதுபோல பேரம் பேசும் டயலொக்கை இதுவரை உருவாக்கும் வல்லமையைப் பெறவில்லை..

சிங்கள அரசுக்கும்.. சர்வதேச சமுதாயத்திற்கும் ஒரே நேரத்தில் பதில் சொல்லக்கூடிய தெளிவான டயலொக்கை கூட்டமைப்பு உருவாக்க வேண்டும்.

தீர்வும் வேண்டாம்.. எதுவும் வேண்டாம்… முதலில் இராணுவத்தை வெளியேற்றி எம்மை இயல்பாக வாழ விடுங்கள்…

மக்களின் பிரச்சனை மக்களால் தீர்க்கப்பட வேண்டும்…

இதற்கு ஏன் தேர்வுக்குழு..

கூட்டமைப்பு தேர்வுக்குழுவை ஏற்று அரசியல் தற்கொலை செய்யுமா.. இல்லையா..

வரும் நிமிடத்துளிகள் ஈழத் தமிழினத்தின் வரலாற்றை மறுபடியும் எழுதப்போகிறது..

சேர். பொன். இராமநாதன் போல தலைப்பா கட்டுக்கு ஏமாராது ஜின்னாபோல சிந்திக்க வேண்டிய நேரம் இது..

கூட்டமைப்பு சரியான பாதையில் போகுமா..

அலைகள் தெற்காசியப் பார்வை..17.07.2011

0 Responses to கூட்டமைப்பு சரியாக செயற்பட வேண்டிய நிமிடத்துளிகள்...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com