Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நோர்வேயில் இடம்பெற்ற கொடூர குண்டுத்தாக்குதலை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டித்திருப்பதுடன், நோர்வேயின் அரசுக்கும், மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக, நா.த.அரசாங்கத்தின் பிரதமர் விசுநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

உலகில் சமாதானத்தை நிலை நாட்டுவதற்காக அயராது பாடுபட்டு வந்துள்ள நோர்வேயிய மண்ணில், இடம்பெற்றுள்ள இக்கொடூரத் தாக்குதலினால், நாங்கள் மிகவும் கவலை அடைகின்றோம்.

இலங்கைத் தீவினில் அமைதியை நிலைநாட்டும் நோக்குடன், சிறிலங்கா அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில், சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதில் நோர்வே அயராது உழைத்ததை இச் சந்தர்ப்பத்தில் நாங்கம் நினைவு கூருகின்றோம்.

இன்றைய கடினமான இத்தருணத்தில், தமிழீழ மக்களாகிய நாங்கள், நோர்வே மக்களுடன் நிற்கின்றோம் என்பதை இவ்வேளை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலகில் சமாதானத்தை வேண்டி நிற்கும் நோர்வேயிய மண்ணில், நடந்தேறியுள்ள இத்தகையை தாக்குதல், உலகெங்கும் சமாதனத்தை விரும்பும் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே கருதப்பட வேண்டியதொன்றாகும்.

அனைத்துலக மட்டத்தில் சமாதானத்தை விரும்பும் அனைவரும் இந்தத் தாக்குதலை ஒருங்கே கண்டிக்க வேண்டும் எனவும் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் வேண்டியுள்ளார்.

நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

0 Responses to நோர்வே குண்டுத் தாக்குதலுக்கு தமிழீழ அரசாங்கம் கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com