ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொண்று குவித்த மகிந்தரின் புகைப்படங்கள் அடங்கிய தேர்தல் துண்டுப் பிரசுரங்களை வல்வெட்டித்துறையில் வினியோகிக்கவேண்டாம் என அப் பகுதியில் உள்ள சில பொதுமக்கள் ஈ.பி.டி.பி யினரை எச்சரித்துள்ளனர். ஆனால் அதனைப் பொருட்படுத்தாது வல்வெட்டித்துறை நகரசபைக்கு போட்டியிடும் ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் வைரமுத்து பரமானந்தராசா துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று மாலை அவர் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தவேளை மின்னல்போல் நுளைந்த பொதுமக்களில் சிலர் அவரை உதைத்துள்ளனர்.
தமிழினத்திற்கு தலைமை தாங்கிய தலைவன் பிறந்த மண்ணில் உம்மைப்போன்ற துரோகிகளுக்கு இடம் இல்லை என்றும், துரோகம் செய்ய நினைப்பவர்களுக்கு இதுதான் பரிசாக கிடைக்கும் என்றும் வல்வெட்டித்துறை பொதுமக்கள் உரக்கக் கூறியுள்ளனர்.
இதேபோன்று பருத்தித்துறை நகரசபைக்கு ஒட்டுக்குழு ஈ.பி.டி.பியின் தலைமை வேட்பாளராக போட்டியிடும் காடை முருகுப்பிள்ளையின் மகன் சிறிபதி முச்சக்கரவண்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது அவர் மீது பருத்தித்துறை இளைஞர்கள் சிலர் சேற்று நீரை வீசியதுடன் துரோகிக்கு இங்கு இடமில்லை என துரத்தியதாகவும் பருத்தித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிர்வு



இந்த செய்தியை கேட்டது மனம் குளிர்ந்து விட்டது... மிக்க மகிழ்ச்சி எம் உறவுகளே....
இளமாறன் தமிழ் நாடு
ஈழத்தில் உள்ள தமிழ் மக்கள் இனியும் அச்சப் படாமல் ஜனநாயக வழி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.