உன் பெயரை தன் மகனின் முகவரியாக்கினார்
எம் தேசியத்தலைவர்.
அவர் வீட்டில் தினம் ஒலிக்கும்...
உன் நாமம்... சார்ல்ஸ் அன்டனி.
மனம் தளர்ந்து ஒதுங்க நினைத்தவரை
இழுத்து வந்து நிமிர்த்தியவன் நீ.
அதைப் பெருமையாகக் கூறுவான்
உன் தலைவன்.
அவருக்குத் தெரியாத விடயமெல்லாம்
நீ கூறுவாயாம்.
பெருமைகொள்...அதையும் வெளிப்படையாய் கூறும்
பரந்த மனமுடையோன் உன் தலைவன்.
உன் ஆளுமை பற்றிப் பேசுகையில்
குழந்தை போலாகிவிடுவார் எம் தலைவன்.
நண்பனாய், தோழனாய்,சேவகனாய், மந்திரியாய்,
முதல் படைத்தலைவனாய் வாழ்ந்தாய்.
தலைவனின் போராட்ட வாழ்விற்கு
சரியான அத்திவாரமடா நீ.
உறுதிதளரா நெஞ்சங்கள் முதல் வித்துக்களாகி,
இறுதிவரை போராடும் பேராளுமையை அளித்தீர்.
அடிபணிவு அரசியலுக்கு அன்னியனே...
திருமலை மண்ணின் போர் முகமே.....
ஒரு விடயத்தைக் கவனி....
சார்ள்ஸ் அன்டனிக்கள் களத்தில்தான் வீழ்ந்தார்கள்..
கயவர்களின் மடியில் அல்ல.
இதயச்சந்திரன்
ஜூலை 15



0 Responses to சார்ள்ஸ் அன்டனிக்கள் களத்தில்தான் வீழ்ந்தார்கள்