Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கறுப்பு யூலை நினைவு சுமந்து கடந்த நாட்களாக யேர்மனியில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு நிகழ்வுகளின் வரிசையில்Bochum , Düsseldorf மற்றும் München நகரங்களிலும் சிறப்பாக இடம்பெற்றது.

மேல் குறிப்பிட்ட நகரங்களின் மத்தியில் மக்கள் நடமாடும் பகுதியில் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வெகுசிறப்பாக ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்தும் அத்தோடு கறுப்பு யூலை தமிழர் இனவழிப்பு தினத்தை நினைவு கூரும்அதே வேளையிலும் 2009 ஆண்டின் தமிழர் இனவழிப்பை நினைவு கூரி அஞ்சலி செலுத்தப்பட்டு தமிழர் மீது 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் கொடுமையான இனவழிப்பை கருத்தில் கொண்டு துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்பட்டு 146 679 தமிழர்களுக்கும் என்ன நடந்தது எனும் தலைப்பில் கண்காட்சியும் வைக்கப்பட்டது . சிறப்பாக "இலங்கையில் கொலைக்களம் "காணொளியும் ஆவலான மக்களுக்கு வழங்கப்பட்டது.

20 இடங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்ட கறுப்பு யூலை நினைவு சுமந்த கவனயீர்ப்பு நிகழ்வுகளின் ஊடாக யேர்மன் மக்கள் மத்தியில் பாரிய பரப்புரை வெற்றியை உணரக்கூடியதாக இருக்கின்றது.

அந்த வகையில் Bochum நகரில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வின் தகவல் மற்றும் தமிழர்களின் நிலைமை குறித்து அங்கு உள்ளூர் செய்தித்தாளில் வெளியிடப்பட்டது .சிறப்பாக அந்த நிகழ்வின் தகவலை 14 வயதுடைய தமிழ் சிறுமி விதுசிகா லோகநாதன் ஒருவரே தொகுத்து அவர் அங்கம் வகிக்கும் இளையோர்களுக்கான பாடசாலை ஊடகத்துறை முன்னேற்றப்பிரிவின் ஊடாக DerWesten எனும் செய்தித்தாளுக்கு கொடுத்திருந்தார்.

இச் சிறுமியின் முயற்சிக்கு யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை பாராட்டுத் தெரிவிக்கும் அதேவேளை இச் சிறுமியை போல் அனைத்து இளையோர்களும் எதிர்காலத்தில் ஈழத்தமிழர்களின் உண்மை நிலையை பல்லின மக்களிடம் கொண்டு செல்ல இது போன்ற வழிகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

தொடர்ந்து எதிர்வரும் 30 .07 .2011 அன்று 14 மணிக்கு Nürnberg நகரத்தில் Hallplatz 1 , Kaufhof அருகாமையில் கறுப்பு யூலை நினைவு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து Nürnberg நகர வாழ் தமிழ்மக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.



0 Responses to யேர்மனியில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு சுமந்த கவனயீர்ப்பு நிகழ்வுகள்! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com