கடாபியின் படைகளை தோற்கடிக்கும் கடைசிப் பெட்டிக்குள்ளான கடும் மோதல்கள் தொடர்ந்து நடைபெறுவதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. போராளிகள் பல மாதங்களுக்கு முன்னரே கட்டாரில் விசேட பயிற்சி பெற்றுள்ளனர். பல வாரங்களாக பெருந்தொகை ஆயுதங்கள் திரிப்போலிக்குள் கடத்தி வரப்பட்டுவிட்டன. இப்போது மோசமான சண்டை நடைபெறுகிறது.
கடாபி மறைந்திருப்பதாகக் கருதப்படும் கட்டிடம் உதை பந்தாட்ட மைதானங்கள் போல பல துண்டுகளாக பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனால் இவற்றைத் தகர்த்து முன்னேறுவது கால தாமதத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. கடாபியின் படைகள் நிற்கும் உயிர்நாடியான பகுதிக்கும் போராளிகளுக்கும் இடையில் வெறும் 500 மீட்டர் இடைவெளியே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில் திரிப்போலியின் வேறு பல இடங்களிலும் தாக்குதல் நடைபெறுகிறது. மர்மமான சில தாக்குதல்களை நேட்டோ மேற்கொண்டுள்ளது. தாக்குதல் இலக்குகள் பற்றி எதுவும் கூறாமலே மோசமான தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
இதற்கிடையில் நேற்றய செய்திகள் பிரச்சாரத்தனமானவை என்று வேறு சில செய்தித் தாபனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால் கடாபியை மடக்குவதற்கு மிகவும் கச்சிதமான திட்டமொன்று அமல் செய்யப்படுவதை உணர முடிகிறது.



0 Responses to கடாபியின் கடைசிப் பெட்டிக்குள் சண்டை 500 மீட்டர்கள் இடைவெளி