Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லிபியத் தலைநகர் திரிப்போலியை கைப்பற்றுவதற்கான விசேட பயிற்சிகள் போராளிகளுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டுள்ளன என்று நியூயோர்க் ரைம்ஸ் தொவிக்கிறது. பிரிட்டன், பிரான்ஸ் உட்பட பல நாடுகள் போராளிகளுக்கான விசேட பயிற்சிகள், அதி நவீன ஆயுதங்கள் போன்றவற்றை வழங்கி தாக்குதலை தூண்டி விட்டுள்ளன.

இந்தப் பயிற்சி நடைபெற மறுபுறம் மேலைத்தேய ஊடகங்கள் கவனத்தை திசை திருப்பும் செய்திகளை வெளியிட்டுள்ளன. போராளிகளால் திரிப்போலியை கைப்பற்ற இயலாது என்று அவை கதையளந்து வந்தன. அதேநேரம் யாரும் எதிர் பாராத வேகத்தில் கடாபி வீழ்ச்சியடைய நேட்டோ நாடுகள் வழங்கிய உதவியே காரணம் என்று போராளிகள் நன்றி கூறினார்கள். நன்கு பயிற்றப்பட்ட போராளிகள் திரிப்போலியில் உறங்கு நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

போராளிகள் ஸாவியா நகரில் இருந்து திரிப்போலியைத் தொட்டதுதான் தாமதம் நாலாபக்கங்களில் இருந்தும் புதிய அதிரடித் தாக்குதல்கள் ஆரம்பிக்க கடாபியின் படைகள் கொலகொலத்துவிட்டன. கடாபியின் மகன்கூட தப்பியோட முடியாதபடி மாட்டிக் கொண்டார். ஆயுதக் கொள்கலங்கள் நாட்டில் இருந்த ஏரி வழியாக இரகசியமாகக் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. நன்கு திட்டமிடப்பட்ட பாரிய இராணுவ மூளைகள் இந்த வெற்றிக்குப் பின்னால் தொழிற்பட்டுள்ளன. ஏறத்தாழ ஓர் அதிரடித்தாக்குதலில் கடாபி சரிக்கப்பட்டிருக்கிறார்.

0 Responses to எப்படி வீழ்ந்தது திரிப்போலி 3 மாதம் விசேட பயிற்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com