Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மதுரையில் உத்தகுடி என்கிற இடத்தில் உள்ள நாகநாதர் கோயிலுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை லாட்டரி அதிபர் மார்ட்டின் மூலம், காந்தி அழகிரி தன் பெயருக்கு பதிவு செய்துகொண்டார் என்றும், இந்த இடத்தை தூத்துக்குடி சுப்பிரமணியன் என்பவருக்கு தற்போது காந்திஅழகிரி பவர் கொடுத்துள்ளார் என்றும், அந்த கோயிலின் டிரஸ்டி ஒருவர் மதுரை எஸ்.பியிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து காந்தி அழகிரி மீது வழக்கு தொடர முடிவானது.

இதையடுத்து, காந்தி அழகிரி மீது வழக்கு பாய்ந்துள்ளது என்றும், இன்று இரவு 8மணிக்கு காந்தி அழகிரி கைது செய்யப்படலாம் என்றும் காவல்துறை வட்டாம் கூறியதால் பரபரப்பு நிலவியது.

ஆனால் காந்தி அழகிரி மீது வழக்கு பதிவு செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காந்தி அழகிரி, தன்னிடம் இருந்த 17 ஏக்கர் நில பவரை தூத்துக்குடி சுப்பிரமணியத்திற்கு மாற்றி கொடுத்துவிட்டார் என்பதால் இந்த வழக்கில் காந்தி அழகிரி மீது வழக்குபதிவு செய்ய போதிய முகாந்திரம் இல்லை என்று அரசு வழக்கறிஞர் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டதால் வழக்கு பதிவு செய்யவிருப்பதை மதுரை எஸ்.பி. அஸ்ரா கார்க் தள்ளிவைத்தார்.

0 Responses to காந்திஅழகிரி மீது வழக்கு பதிவு செய்வதில் பின்னடைவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com