Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண வைபவம் நேற்று யாழ்ப்பாணத்தில் பெரும் எடுப்பில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் இளங் கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், எஸ். சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், அ.விநாயகமூர்த்தி, எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன், விநோ னோதராதலிங்கம் ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரை ரட்ணசிங்கம், இமாம், சந்திரநேரு, சித்தார்த்தன் மற்றும் பேராசிரியர் சிற்றம் பலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீல ஸ்ரீஞானசம்பந்தபரமாச்சார்ய சுவாமிகள், தென்னிந்திய திருச்சபை குருமுதல்வர் வணபிதா. டேனியல் தியாகராசா, மௌலவி மஹ்முத் ஆகியோர் ஆசிஉரை வழங்கினர்.மங்கள விளக்கேற்றலுடன் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாட, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய 23 உள்ளூ ராட்சி சபைகளின் பிரதிநிதிகள் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். விழா நிகழ்வுகளை யாழ். மாநகர சபை முன்னாள் ஆணையாளரும் தமிழரசுக் கட்சியின் இணைச்செயலாளருமான சி.வீ.கே. சிவஞானம் தொகுத்து வழங்கினார்.

0 Responses to வடக்கு, கிழக்கில் வெற்றிவாகை சூடிய தமிழர் பிரதிநிதிகள் பதவியேற்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com