Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் கொலை வழக்கின் மரண தண்டனை கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய முடியும் என நம்புகிறோம் என இவர்களுக்காக குரல் கொடுத்து வரும் வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதி அலுவலகத்துக்கு அனுப்பிய மூன்று பேரின் மனுக்களை நிராகரித்ததற்கான முறையான கடிதம் இன்னும் வரவில்லை.

அந்த கடிதம் வந்த பின்னர் உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். அதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதற்காக தமிழகத்தில் பிரபலமான மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். இக்குழு எப்படி இந்த தண்டனையை ரத்து செய்வது என்பதற்கான சட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

இந்த வழக்கில் இன்னும் விசாரணை முடியவில்லை என்பதால், இவர்களுக்கான தண்டனையை ரத்து செய்ய முடியும் என்று நம்புகிறோம் என்றார்.

0 Responses to தூக்குத்தண்டனையை ரத்து செய்ய முடியுமென நம்புகிறோம்!: வழக்கறிஞர் சந்திரசேகர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com