வைகோ எழுதிய "குற்றம் சாட்டுகிறேன்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். கவிஞர் இன்குலாப் நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் ஏற்புரை நிகழ்த்திய வைகோ,
கடந்த 1987 முதல் ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்து வருகிறது. இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலை போரை தடுத்து நிறுத்தும்படி இந்திய அரசை நான் பலமுறை தொடர்ந்து கேட்டேன். ஆனால் கடைசி நிமிடம் வரை போரை நிறுத்தும்படி இந்தியா சொல்லவில்லை.
தமிழின உணர்வுடன்தான் தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள். ராணுவ வாகனத்தை தாக்கியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை போட்டதை ஜனாதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார். இது திமுக அரசின் கன்னத்தில் அறைந்த செயலாகும்.
இலங்கையின் ஒருமைப்பாட்டை காப்பாற்ற இந்தியா ஆயுதம் கொடுத்தால், தமிழ்ஈழம் அமைய இங்குள்ள தமிழர்கள் உதவி செய்வார்கள்.
ராஜபக்சேவுக்கு கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி பேசுகிறார். ஈழத்தமிழர்கள் நடத்தப்படும் விதமும், இங்குள்ள தமிழர்கள் நிலையும் ஒன்றா? அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கையை தமிழீழத்துடன் ஒப்பிட்டு முதல்வர் பேசுவது தவறு.
தமிழ் ஈழத்தில் நடப்பதுபோல தமிழர்களின் உரிமைகள், உணர்வுகள் இங்கு நசுக்கப்பட்டால், தமிழ் நாட்டிலும் மீண்டும் அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை எழும். பிரபாகரன் உயிருடன் வாழ்கிறார். வர வேண்டிய நேரத்தில் அவர் தோன்றுவார். மீண்டும் ஈழப்போரை தலைமையேற்று நடத்துவார் என்றார்.
பிரபாகரன் மீண்டும் ஈழப்போரை தலைமையேற்று நடத்துவார்: வைகோ பரபரப்பு பேச்சு
பதிந்தவர்:
தம்பியன்
16 July 2009
0 Responses to பிரபாகரன் மீண்டும் ஈழப்போரை தலைமையேற்று நடத்துவார்: வைகோ பரபரப்பு பேச்சு